Monday, December 11, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 10 Dark matter

தலை உயர்த்தி வானை பார்க்கும் சமயம் நம் கண்களுக்கு தெரிவது நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள். நாம் நட்சத்திரங்களையும் கோள்களையும் விடுத்து மற்ற அனைத்தும் ஒரு சூனியவெளி(vaccum) என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் 82% நம் கண்களுக்குத் தெரியாத பொருள்கள்(matter) நிறைந்திருக்கிறது. இன்றைய பிரபஞ்சம் இன்று இது போல இருப்பதற்கு காரணமே இந்த பொருள்கள் தான். இவைதான் dark matter(கரும் பொருள்கள்).

இதைப் பற்றித்தான் இன்று பெருஅண்டவியலில்(cosmology) துறையில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஆராயந்து வருகிறார்கள்.

முதலில் dark matter என்றால் என்ன என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்க அல்லது உணர வேண்டுமெனில் அதற்கு இரண்டு விதமான குண நலன்கள் வேண்டும். ஒன்று ஒளி அதன் மீது படரும் பொழுது பிரதிபலிக்க வேண்டும். ஒளி பிரதிபலிக்காமல் ஒரு பொருளை அப்படியே தாண்டி சென்றால் அந்தப் பொருளை நம்மால் காண இயலாது.

st gobain விளம்பரம் பார்த்திருப்பீர்கள் ஒரு பெண் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து வந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் இருவர் மேல் ஊற்றுவார். அவர்கள் இருவரும் மேஜைக்கு பின்னால் சென்று ஒளிந்த பின் தான் தெரியும் குறுக்கே ஒரு கண்ணாடி இருக்கிறது என்று. இந்த சமயத்தில் அந்தக் கண்ணாடி ஒளியை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல் விட்டதால் தான் கண்ணாடி இல்லாதது போலத் தோன்றியது.

இன்னொரு வகை வெப்பமாக இருக்கும் பொருள்களையும் நம்மால் உணர முடியும் பார்க்க முடியும். ஆங்கிலப் படங்களில் எல்லாம் காட்டுகிறார்களே அது போல இருட்டில் அகச்சிகப்புக் கதிர்கள்(infrared) கண்ணாடி கொண்டு எதிரிகளை நோட்டம் விடலாம். இது போன்ற கண்ணாடிகள் எந்த அடிப்படையில் இயங்குகிறது என்றால் வெப்பமாக இருக்கும் எல்லாப் பொருள்களில் இருந்தும் சில கதிர்கள் வெளிப்படும். மனித உடல் இருந்து கூட கதிர்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதிர்களை வைத்து ஒரு பொருள் இருப்பதை கண்டு கொள்ள முடியும். இந்தக் கதிர்கள் ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து மாறுபடும். மிக வெப்பமாக இருக்கும் சில நட்சத்திரங்களில் இருந்து எக்ஸ்ரே கதிர்கள் கூட வெளிப்படும்.

ஆக இந்த இரு வகையான குணங்கள் இருக்கும் பொருள்களையே நம்மால் கண்டு கொள்ள முடியும்.

இந்த இருவகையான குண நலன்களும் இல்லாத பொருள்கள் தான் dark matter. இவை இந்தப் பிரபஞ்சத்தில் 82 சதவீதகத்தை ஆக்ரமித்திருக்கிறது. இந்தப் பொருள்கள் இப்படி இருப்பதாலேயே இவை இருக்கின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் திக்கி திணறி விட்டார்கள். 1930 வருடம் கண்டு பிடிக்கப் பட்ட இந்த பொருள்கள் இருப்பதை 2003லேயே நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

1930ல் முதன் முதலாக பிரிட்ஸ் சுவிக்கி என்பவர் ஒரு அண்ட வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கும் சமயம் அந்த அண்ட வெளியின் மாஸை(mass தமிழாக்கம் தெரியவில்லை weight and mass என்பது இரண்டுமே வித்தியாசமானது. மாஸ் தமிழ் சொல் தெரியவில்லை) வெளிச்சத்தின் அடிப்படையில் கணக்கிடுவதிலும்( ஒரு அண்ட வெளியின் மாஸைக் கண்டு கொள்ள அந்த அண்ட வெளியின் பிரகாசத்தைக் கணக்கில் கொண்டும் கண்டு பிடிக்கலாம்), சாதாரண வகையாக கணக்கிடுவதிலும் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். எதோ கொஞ்ச வித்தியாசம் இருந்திருந்தால் விட்டிருப்பார். ஆனால் இந்த வித்தியாசம் மிக அதிகமாக இருப்பத்தால் வெளிச்சம் வெப்பம் ஆகியவைகளின் அடிப்படையில் இயங்காத பொருள்கள் இருக்கின்றன என்பதை கண்டு கொண்டார்.

இது தான் முதன் முதலில் dark matter இருப்பதை உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்த சம்பவம்.

Dark matter ஏன் மற்ற பொருள்களைப் போல இருப்பதில்லை என்றால். நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த அணுக்களின் மூலப் பொருள்கள் மூன்று proton, neutron
and electron. இந்த மூன்று பொருள்களுடன் டெல்டா, லேமிடா, சிக்மா, ஜீ, ஒமேகா ஆகிய பொருள்களை baryonic matter என்று சொல்லுவோம்.

இந்த baryonic மேட்டர் தான் நம் கண்களுக்கு தெரியும் இது மட்டுமே இந்த உலகில் நிறைந்திருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

இந்த baryonic மேட்டர் தான் நாம் உருவாவதற்கு, பூமி, சூரியன், அண்ட வெளி, சூப்பர் நோவா எல்லாமே உருவாகுவதற்கு அடிப்படை.

ஆனால் nonbaryonic dark matter தான் இந்த உலகில் 82% சதவீதகம் நிறைந்திருக்கிறது. இவை வெப்பம் கொள்ள விட்டாலும் இவற்றுக்கும் மாஸ் இருக்கிறது. சார்புநிலைத் தத்துவத்தின் படி மாஸ் என்பது தான் gravityக்கு அடிப்படை. ஆகவே இந்த dark matter என்பது இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்கு மிக அவசியமானதாகுகிறது.

பெருவெடிப்பு(big bang) என்பதை விளக்குவதற்கு இந்த dark matter என்பது மிக அவசியமானதாகும், பல விளக்க முடியாத விஷயங்களை விளக்குவதற்காக இந்த dark matterஐ விஞ்ஞானிகள் உபயோகித்துக் கொண்டார்கள்.

ஆனால் பல காலம் இந்த dark matter இருப்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்கவே முடியவில்லை. வெளிச்சம் பிரதிபலிக்காமல், வெப்பம் இல்லாத பொருள்களை உணர்வது கடவுளை உணர்வது போல இருக்கிறது என்று தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது. ஆனால் கடைசியாக 2003ம் வருடம் விஞ்ஞானிகள் dark matter இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளார்கள்.

இன்று சராசரியான எல்லா மனிதர்களும் இறைவனை நம்புகிறார்கள், இறைவனே இந்த உலகை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள். மனிதன் என்பவன் கடவுளின் படைப்பு என்றும் கடவுளே மனிதர்களை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள்.

மைக்ரோ ஸ்கோப்பில் பார்த்தால் கூட தெரியாத பொருள்கள் நம்மிடையே இருக்கிறது. பேக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை விட பல கோடி மடங்கு சிறிய பொருள்கள் இவை. இந்த பொருள்களைப் பற்றி நாம் கவலை கொள்கிறோமா? இல்லை தெரிந்து கொள்ள தான் முயற்சிக்கிறோமா?

இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போலத்தான் இருக்கிறோம். insignificant மனிதர்கள் நாம். அதனை உணர்ந்து எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அகம்பாவம் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை. இந்த பூமியில் கூட ஒரு மாற்றமும் வராது.

இதனை உணர்ந்து மனிதன் நடந்து கொண்டால் நல்லது. இல்லையெனிலும் ஒன்றும் இல்லை இந்த பிரபஞ்சம் இருக்கும் இந்த பூமியும் இருக்கும் மனிதர்கள் நாம் இருக்க மாட்டோம் அவ்வளவே.

8 comments:

குமரன் (Kumaran) said...

செந்தில் குமரன். கரும்பொருட்களைப் பற்றி மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள். இந்தப் பதிவை இரண்டு பாகங்களாக இட்டிருக்கலாம். முதல் பாகத்தில் கரும்பொருள் என்றால் என்ன என்பதையும் இரண்டாம் பாகத்தில் எப்படி கண்டுபிடித்து நிறுவினர் என்பதையும் சொல்லியிருக்கலாம். இந்தப் பதிவில் முதலாவதை நன்கு சொல்லியிருக்கிறீர்கள். இரண்டாவதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நன்றாக இருக்கும். எப்படி கண்டுபிடித்தார்கள் என்பது தெளிவாக இல்லை. அறிவுரை என எண்ண வேண்டாம். சும்மா ஒரு நண்பனின் கருத்து என்று கொள்ளுங்கள்.

ஓகை said...

உங்கள் பதிவுகள் அனைத்தையும் இப்போதுதான் படித்து முடித்தேன். அறிவியல் செய்திகளை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். பிரமித்துப் போனேன்.

ஆன்மீக செய்திகளில் எனக்கு வேறு கருத்துகள் இருக்கின்றன.

அருமையாக எழுதுகிறீர்கள். தொடருட்டும் உங்கள் பணி.

மாஸ் என்பதை பருப்பொருள் என்று சொல்வார்கள். பெருஅண்டவியல் என்பது பேரண்டவியல் என்று சொல்லப்பட வேண்டும்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குமரன் வருகைக்கு நன்றி.

கண்டிப்பாக இன்னொரு பாகமாக எழுத முயற்சிக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி ஓகை அவர்களே.

சீனு said...

Xcellent post.

Anonymous said...

நல்ல பதிவு.
"Mass" - நிறை
"weight" - எடை , என்று ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடத்த்தில் படித்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் [GK] said...

//இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போலத்தான் இருக்கிறோம். insignificant மனிதர்கள் நாம். அதனை உணர்ந்து எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அகம்பாவம் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை.//

அருமையாக எழுதப்பட்ட அறிவியல் கட்டுரையில் முத்தாய்ப்பாக பகுத்தறிவு, ஆன்மிக முடிவுரையில் முடித்திருக்கிறீர்கள்

dark matter ன் வெளிச்ச பக்கத்தை அறிந்து கொண்டேன்.

நன்றி !

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சீனு, ஜீவன், கோவி வருகைக்கு நன்றி.

ஜீவன் தகவல்களுக்கு நன்றி