Friday, December 01, 2006

அறிவியல் ஆன்மீகம் 10 டினோசர் பாடம்

டினோசர் என்றால் இன்று நமக்கு ஞாபகம் வருவது ஜூராஸிக் பார்க் திரைப்படங்கள் மட்டுமே. மேலும் நம்முடைய பொதுவாக அவை மற்ற மிருகங்களைப் போலவே ஐந்தறிவு மட்டுமே கொண்டவை, சிந்திக்கும் திறம் அற்றவை என்று நம்புகிறோம்.

6 கோடியே அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் அழிந்து போன டினோசர்கள் சிந்திக்கும் திறன் கொண்டவையா என்பதை எல்லாம் ஆராய்ந்து அறிவது மிகக் கடினமான செயலாகும். ஆகவே இது குறித்து பல வேறு கருத்துக்கள் விஞ்ஞானிகளிடையே நிழவி வருகின்றன.

ஆனால் டினோசர்களைப் பற்றி எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம் என்னவெனில் டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் டினோசர்கள் தான் உணவு சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain)இருந்தன.

அது என்ன உணவு சங்கிலி?

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒரு உணவு உட்கொள்வதில் ஒரு சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளது போலுள்ளார்கள். உதாரணத்திற்கு பல்லிகள் சின்னச் சின்னப் பூச்சிகளை சாப்பிடுகின்றன. அதே போல பல்லிகளை பாம்புகள் சாப்பிடுகின்றன. பாம்புகளை பருந்துகள் சாப்பிடுகின்றன. பல்லி என்பது பூச்சிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பாம்புகள் பல்லிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பருந்துகள் உணவுச் சங்கிலியில் பாம்புகளை விட மேலே இருக்கின்றன.

இதே போல பல உணவுச் சங்கிலிகள் இந்த உலகில் இருக்கின்றன. இந்த உணவுச் சங்கிலியில் ஒரு சமயத்தில் எந்த ஒரு உயிரினம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக இருக்கிறதோ அதுவே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(Top of the food chain)இருக்கிறது என்று அர்த்தம்.

இன்று மனிதன் தான் உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருக்கிறான். டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் அவையே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருந்தது.

அதாவது இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமெனில் டினோசர்கள் தான் அவை இருந்த காலகட்டத்தில் இந்த உலகில் இருந்த மிக ஆற்றல் மிகுந்த(dominating) மிருகம்.

மனிதர்களுக்கும் டினோசர்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுவே. இரு விலங்குகளுமே அவை இருந்த காலகட்டத்தில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த மிருகங்கள்.

இப்படி இருந்த டினோசர்கள் முற்றிலுமாக அழிந்து போய் மனிதர்களாகிய நமக்கு சில பாடங்களை விட்டு சென்றிருக்கிறது.

உடனே டினோசர்கள் எதோ முட்டாள்தனமாக அழிந்து விட்டது அல்லது அழிக்கப் பட்டது என்று நாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. மேலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது டினோசர்கள் இந்த பூமியில் கிட்டத்தட்ட 165 மில்லியன் வருடங்கள் அதாவது 16.5 கோடி வருடங்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருந்தன. மனிதன் இந்த பூமியில் 60 மில்லியன் வருடங்கள் தான் இருந்திருக்கிறான் அதாவது 6 கோடி வருடங்கள்.(படங்களின் மூலமும் சமிஞ்சைகள் மூலமும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளத் துவங்கிய மனிதனின் வயது சுமார் 1 லட்சம் வருடங்கள்( மறுபடியும் இதெல்லாம் evolution என்ற விஞ்ஞானம் கணித்தது மதங்களின் அடிப்படையில் மனிதனின் வயது 6000 ஆண்டுகள் தான்)).

மனிதன் இன்று அழிவுப் பாதையில் செல்வதைப் பார்த்தால் இன்னும் கால் நூற்றாண்டைக் கூட தாண்ட மாட்டோம் என்று நினைக்கிறேன். ஆக நம்மை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக டினோசர்கள் இந்த பூமியில் இருந்திருக்கின்றன.

ஆக டினோசர்களின் நமக்கு விட்டுச் சென்ற பாடங்கள் மிக முக்கியமானவையே என்று நினைக்கிறேன். அந்தப் பாடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்னர் அறிய வேண்டியது டினோசர்கள் எப்படி அழிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றியும் இன்று தெளிவான ஒரு விளக்கம் இல்லை. பல வேறுபட்ட கருத்துக்கள் நிழவி வருகின்றன.

இதில் மிக பரவலாகவும், பிரபலமாகவும் உள்ள கருத்து ஒரு விண்கல் இந்த பூமியைத் தாக்கி அதன் மூலம் டினோசர்கள் அழிந்தது என்பது தான். அந்த விண்கல் பூமியைத் தாக்கிய உடன் பூமியில் ஒரு மிகப் பெரிய புகை மண்டலம் எழுந்து இந்த பூமியின் சூரிய வெளிச்சம் நுழைய முடியாதபடி மூடியது என்றும், சூரிய வெளிச்சம் பூமியில் விழாததால் பூமியில் உள்ள தாவரங்கள் அனைத்தும் முதலில் அழிந்தது பின் உயிரினங்கள் ஒவ்வொன்றாக அழிய தொடங்கியது என்பது ஒரு கருத்து.

ஒரு விண்கல் பூமியைத் தாக்கி மனித குலமே அழிந்து போவது போன்று வெளி வந்த deep impact என்ற படம் மிக பிரபலமான படம். அது போன்றும் இன்றும் நிகழலாம் நிகழக் கூடும். இது நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது மாதிரியான ஒரு வீடியோ கீழே.



இது மிகப் பிரபலமான விளக்கமாக இருந்தாலும் இந்த விளக்கம் முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இதே போல பல கருத்துக்கள் நிழவி வருகின்றன.

திடீரென்று பூமியின் புவியீர்ப்பு விசை அதிகரித்ததால் டினோசர்கள் நகர முடியாமல் அழிந்தது என்பது உட்பட பல கருத்துக்கள் உண்டு. ஆனால் இதுதான் சரி என்று சொல்ல முடியாத வகையில் சில பிரச்சனைகள்.

ஆகவே எப்படி அழிந்தது என்பதை அறுதியிட்டு யாராலும் கூற முடியவில்லை.

ஆனால் டினோசர்களின் அழிவுக்கு இயற்கையே காரணம் அவை ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு(உணவுக்குத் தவிர) அழிந்து போய் விடவில்லை என்பது திண்மம்.

இங்கே தான் டினோசர்கள் நமக்கு விட்டுச் சென்ற சில பாடங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

அவரவர்களின் காலகட்டத்தில் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருந்தது இருப்பது மனிதனும், டினோசர்களும். டினோசர்களின் புத்திசாலித்தனம் குறித்து பல வேறு ஐயப்பாடுகள் நிழவினாலும் பிரபலமான கருத்துக்கள் அவைகளும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தன என்றே குறிப்பிடுகின்றன(ஜுராஸிக் பார்க் படத்தில் கூட ராப்டர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் ஆற்றலும், மனிதனையே யோசித்து ஏமாற்றும் ஆற்றலும் கொண்டிருப்பதாக காமித்திருப்பார்கள் ஆனால் இதெல்லாம் எந்த அளவு உண்மை என்பது சர்ச்சைக்குறியதே.)

இப்படி இருந்தாலும் டினோசர்கள் இயற்கையின் அழிவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

இன்றும் சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளில் இருந்து மனிதனால் சிறிய அளவில் தற்காத்துக் கொள்ள முடிகிறது அவ்வளவே. Global Warming போன்ற தவிர்க்க இயலாத(இன்றைய சூழ்நிலையில் Global Warmingஐ தவிர்க்கவே இயலாது அது ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை சற்று மட்டுப்படுத்தலாம் அவ்வளவே) அழிவை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம்.

டினோசர்கள் 10 கோடி ஆண்டுகள் நம்மை விட அதிகமாக இந்த பூமியில் இருந்திருக்கிறது. நம் அளவுக்கு கலாச்சாரம், நாகரீகம் போன்றவை அந்த மிருகங்கள் இடையே இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி இருந்தும் 10 கோடி ஆண்டுகள் முன்னரே நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமே யார் இதில் புத்திசாலி மிருகம்?

இன்று நாம் செய்து கொண்டிருக்கும் இயற்கைச் சீரழிவுகள் நம்மை டினோசர்களை விட 10 கோடி ஆண்டுகள் முன்னதாக அழித்து விடக் கூடும் என்று இருக்கிறது சூழ்நிலை.

ஆனால் அதற்கு முன்னரே முந்திக் கொண்டு நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளப் போகிறோமா?

டினோசர்கள் உணவினை விடுத்து வேறு காரணங்களுக்காக வேறு எந்த ஒரு மிருகத்தையோ இல்லை வேறு டினோசர்களையோ கொல்லுவதில்லை. ஆனால் மனிதர்கள் தோலுக்காக மற்ற மிருகங்களையும் முட்டாள்தனங்களால் சக மனிதர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம்.

பிற உயிர்களையே ஏன் கொல்ல கூடாது என்று யோசிக்கும் அறிவு படைத்த மனிதன் சக மனிதனையே கொல்லக் காரணியாக இருக்கும் செயல்களுக்கு தெரிந்தும் ஆதரவளிக்கிறான். மனிதன் உண்மையில் டினோசர்களை விட புத்திசாலி என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

4000 வருட நாகரீகத்தில் மனிதன் தன்னுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். இதை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக இந்த பூமியில் வலம் வந்த டினோசர்கள் புத்திசாலி மிருகங்களாகவே தோன்றுகின்றன.

எனக்கு டினோசர்கள் விட்டுச் சென்ற பாடமாக தோன்றுவது என்னவென்றால் இயற்கை என்பது மிக மிக சக்தி வாய்ந்தது. அதன் ஆற்றல் முன் மனிதன் என்பவனோ இல்லை டினோசர்களோ இல்லை எந்த சக்தியோ எதுவுமே பெரியதில்லை.

இந்த ஆற்றலுக்கும் சக்திக்கும் பெயரிட்டோ இல்லை புஸ்தகங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன் என்றோ நம்பி அழிந்து போவது முட்டாள்தனம்.

இப்படி செய்வதன் மூலம் ஐந்தறிவு மிருகங்களை விட குறைவான அறிவு கொண்டவர்களாகவே ஆகிறோம்.

4 comments:

குமரன் (Kumaran) said...

//6 கோடியே அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு //

அது எப்படிங்க ஆறு கோடியே அறுபத்தி ஐந்து வருடங்கள்ன்னு அவ்வளவு துல்லியமா சொல்றீங்க? :-)

//மதங்களின் அடிப்படையில் மனிதனின் வயது 6000 ஆண்டுகள் தான்//

எந்த மதத்தின் அடிப்படையில்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். ஏன்னா இந்திய மதங்களின் படி உலகம் தோன்றியும் மனிதர்கள் தோன்றியும் பல கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன. :-)

குமரன் (Kumaran) said...

படத்தைப் பாத்தா கொஞ்சம் பயமா தான் இருக்கு.

ஓகை said...

அருமையாக எழுதுகிறீர்கள். தொடரட்டும்.

நான் முன்பே எழுதிய ஒரு குறள் வெண்பா இப்படத்திற்கு பொருத்தமாக வருகிறது.

*பெருவின்கல் ஒன்று புவியை நெருங்க
*நவிலத் துடித்த நிலா.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வருகைக்கு நன்றி குமரன், ஓகை

குமரன் சுமார் என்ற வார்த்தை விட்டுப் போய் விட்டது.

ஓகை சார் வெண்பா எல்லாம் வடிக்கறீங்களா? தெரியாம போச்சே வர்றேன் உங்களோட அந்தப் பக்கத்துக்கு.