Sunday, October 08, 2006

இயற்பியல் நோபல் பெருவெடிப்பு கண்டுபிடிப்புகளுக்காக

பெருவெடிப்பு(Big Bang) பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஜான் சி. மாதர்(John C. Mather) மற்றும் ஜார்ஜ் எப். சுமூட்(George F. Smoot) என்ற இருவருக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. பிண்புல கதிர்வீச்சு(Back ground radiation எதோ தெரிந்த அளவில் மொழி பெயர்த்துள்ளேன்) பெரு வெடிப்பின் மூலமே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு அத்தாட்சியாக பல விஞ்ஞானிகளால் இன்று சொல்லப் படுகிறது.

இதில் ஆராய்ச்சி செய்ததற்காகவும் கரும்பொருள்(Black body) என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதற்க்காகவும் இவர்களுக்கு இந்த நோபல் பரிசு கொடுக்கப் பட்டிருக்கிறது.

இன்று பலர் பெரு வெடிப்பு குறித்து பல சந்தேகங்கள் நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் சமய்த்தில் இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

11 comments:

செந்தழல் ரவி said...

குமரன், அப்போ கடவுள் உலகத்தை படைச்சாரு அப்படீன்றது சும்மா உடான்ஸ் , இல்லையா ??

செந்தில் குமரன் said...

மில்லியன் டாலர் கேள்வின்னு சொல்லுவாங்க பல பில்லியன் வருடக் கேள்வியையும், மனிதனின் அளவுகோல்களால் அளவிட முடியாத அளவு மதிப்புள்ள கேள்வியை கேட்டிருக்கீங்க.

என்னால் இதற்கு கண்டிப்பாக பதில் சொல்ல முடியாது. இதற்கு பதில் இன்னும் கிடைக்கவில்லை.

singularity சிக்கல் இல்லை என்றால் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்.

கோபி(Gopi) said...

Black bodyன்னா "கரும்பொருள்"ங்க...

நாங்கல்லாம் தமிழ்வழிக் கல்வியில படிச்சவங்க பாருங்க.. 12ஆவது இயற்பியல்-1 புத்தகத்துல 8ஆவது பாடத்துல படிச்ச மாதிரி ஞாபகமுங்க... :-)

செந்தில் குமரன் said...

கோபி நன்றீங்க மாத்தீடறேன்.

கோவி.கண்ணன் [GK] said...

//இதில் ஆராய்ச்சி செய்ததற்காகவும் கரும்பொருள்(Black body) என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதற்க்காகவும் இவர்களுக்கு இந்த நோபல் பரிசு கொடுக்கப் பட்டிருக்கிறது.
//

குமரன்...!
மதவாதிகளுக்கும் பெரும் வெடிப்புதான் மண்டையில்!
:)

செந்தில் குமரன் said...

கோவி. singularity சிக்கல் இருக்கும் வரை முழுவதுமாக இப்படி சந்தோஷப் பட்டுக் கொள்ள முடியாது.

இன்னும் வாடிகன் singularity ஏற்படுத்தியது கடவுள்தான் என்று சொல்லி கொண்டிருக்கிறது.

Big Bang உலகிற்கு அறிமுகம் செய்ததே பாதியார் ஒருத்தர் தான்.

sigularityயை யாரானும் கணிதம் மற்றும் அறிவியல் துணை கொண்டு விளக்கும் வரை வாடிகன் இதனை தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடிக் கொண்டே இருக்கும்.

குமரன் (Kumaran) said...

செந்தில் குமரன்.

பெருவெடிப்பு, பின்புலக்கதிர்வீச்சு, கரும்பொருள் என்று மிக நன்றாகத் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். நன்று. நன்று.

'டிஸ்கவர்' என்றொரு மாத இதழ் இங்கே வந்து கொண்டிருக்கிறது. எங்கள் வீட்டிற்கும் ஒவ்வொரு மாதமும் வருகிறது. அதன் மூலம் பெருவெடிப்பு, பின்புலக்கதிர்வீச்சு போன்றவற்றை அறிந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் எல்லா இயற்பியல் விதிகளும் பயனற்றுப் போகும் அந்த சிங்குலாரிட்டி (இதற்குத் தமிழ் என்ன?) மட்டும் எந்த மாடலிலாவது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் முகமாகக் காட்டிவிட்டால் பின்னர் பெருவெடிப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் வலுவிழந்து போய்விடுவர்.

டான் பிரவுனின் 'ஏஞ்சல்ஸ் & டெமன்ஸ்' படித்திருக்கிறீர்களா? நல்ல நாவல். இரண்டு மாதங்களுக்கு முன் படித்தேன்.

செந்தில் குமரன் said...

குமரன் வருக்கைக்கு மிக்க நன்றி. நீங்கள் ஆன்மீகத்தில்தான் பெரிய ஆள் என்று நினைத்திருந்தேன் ஆனால் அறிவியலிலும் பெரிய ஆள் தான் போல் தெரிகிறது. சிங்குலாரிட்டி தமிழ் வார்த்தை தேடிப் பார்த்தேன் எதுவும் கிடைக்கவில்லை. படித்திருக்கிறேன் அந்தக் கதையில் வரும் ஆண்டி மேட்டரைக் பற்றி இதற்கு முன் எழுதிய பதிவில் சொல்லி இருக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

அதென்னங்க சிங்குலாரிடி? அதை விளக்கி ஒரு பதிவு போடுங்களேன்..

செந்தில் குமரன் said...

பொன்ஸ் வாங்க வருகைக்கு நன்றி. தனியாக எழுதறேன் இருந்தாலும் ஒரு முன்னோட்டமாக இங்கும் சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்.

இயற்பியலில் எந்த ஒரு விஷயம் எடுத்துக் கொண்டாலும் அது எப்படி இருந்தது அதன் தன்மைகள் என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு தங்கம் என்பதை எடுத்துக் கொண்டால் அது ஒளிரும் தன்மை உடையது, மஞ்சம் நிறம் கொண்டது, அது இந்த அளவு வெப்பத்தில் கரையும் என்பதெல்லாம் இதன் சில தன்மைகள்.

இப்படி பூமியில் உள்ள பொருள்கள் மட்டும் அல்ல நட்சத்திரங்கள், சூரியன் என்ற அனைத்தையும் விளக்க வேண்டும் என்கிறது இயற்பியல். அதாவது நட்சத்திரங்களில் ஹைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து ஹீலியம் என்று ஆகிறது இப்படி ஆகும் சமயம் வெளிப்படும் சக்தியே இதனுடைய வெளிச்சத்திற்கும் வெப்பத்திற்கும் காரணம் என்று நட்சத்திரங்களைப் பற்றி சொல்கிறார்கள்.

இதே போல இன்றைய பிரபஞ்சத்தையும் இயற்பியலால் விளக்க முயல்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் விசைகள்(forces), இதன் வெப்பம் என்பதை எல்லாம் இன்று நமக்குத் தெரியும்.

இதே போல பிரபஞ்சம் தோன்றும் சமயம் எவ்வாறு இருந்தது என்பதை விளக்க முயலும் சமயம் நம்முடைய விஞ்ஞானிகள் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்கள்.

அவர்களால் அப்பொழுது இருந்த சூழ்நிலைகளை விளக்க முடியவில்லை இப்பொழுது இருக்கும் எல்லா விளக்கங்களும் அந்த சமயத்தில் பயனற்று போய் விடுகின்றன.

பெரு வெடிப்பு நடந்து 10^-43 நொடிகளுக்கு அப்புறம் இந்த பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை விளக்க முடிகிறது அவர்களால். அந்த சமயத்தில் பிரபஞ்சம் எவ்வளவு வெப்பமாக இருந்தது, அப்பொழுது பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருந்த விசைகள் எப்படி இருந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்ல முடிகிறது. ஆனால் பெருவெடிப்பு நடந்த அதே சமயத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை. அந்த சமயத்தை தான் சிங்குலாரிட்டி என்று சொல்கிறோம். அதாவது தோற்றத்தின் பொழுது இந்தப் பிரபஞ்சம் எப்படி இருந்தது இதனைக் கண்டுபிடித்து விட்டால் ஏன் பெருவெடிப்பு நடந்தது என்பதைக் கூட விளக்கி விட முடியும். அதாவது கடவுள் பெருவெடிப்பை நிகழ்த்தவில்லை என்று கூட நிரூபித்து விடலாம்.

ஜாகிர் said...

சிங்குலாரிட்டி யின் தமிழ் "தனித்தண்மை". ஒளியின் வேகம் 3லட்சம் km/s இதற்கு மேல் வேகமே இல்லை என்பது அறிவியல்.ஆனால் பெருவெடிப்பில் பிரபஞ்சம் உண்டாகி விரிவடையும் வேகம் 10 த்தின் மேல் 30 பூச்சியம். km/s. 300000/s க்கு மேல் வேகம் இல்லை என்பது அறிவியல்.ஆனால் அதை சொல்லும் அறிவியலே பிரபஞ்சம் 1000000000000000000000000000000 km/s வேகத்தில் விரிவடையுதுன்னு சொல்லுது. s.j.சூரியா ஒரு படத்தில் "இருக்கு ஆனால் இல்லை "என்பார். அதையே விஞ்ஞானம்,"இல்லை ஆனால் இருக்கு" என்று மாற்றி சொன்னால்? விஞ்ஞானிகளையும் s.j.சூரியாவை பார்பது போல தான் பார்க்க வேண்டும் என்கிறீர்களா?.விரிவடையும் பிரபஞ்சம்,சும்மா விரிவடையாமல் இடைஇடையே ஒரு galaxy யை ஏற்படுத்தி விட்டு விரிவடையுது என்று சொன்னால் ஏன்? அதற்கு திட்டம் இட்டவன் யார்? தானாகவா விரிவடையுது? விஞ்ஞானிகளுக்கு கிடைத்த வார்த்தை singularity தனித்தண்மை.அந்த தனிதண்மைக்கு பதில் சொல்லாமல் உடான்ஸா என்று அவசர குடுக்கை தனமாக கேள்வி கேட்காமல் தவிற்கலாமே செந்தழலாரே. இதை எனக்கு விளக்கிய டாக்டர் அப்துல்ரஹ்மான் அவர்களுக்கு நன்றி. சில நாட்களுக்கு முன் சென்னையில் நாத்திகர்களுடன் ஒரு விவாதம் நடந்தது அதை பாருங்கள் சகோதரர்களே
www.onlinepj.com