Thursday, September 21, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 6

சரி போன பகுதியில் நான் கேட்ட கேள்விக்கான விடை என்ன என்பதை லாஜிக்கலாக யோசித்து சொல்லி விடலாம். ஹைட்ரஜனில் neutron இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றால் அதில் ஒரு proton மட்டுமே இருப்பது தான் காரணம். ஹீலியம் என்பதில் பார்த்தீர்களானால் 2 protons இருக்கும் இப்படி இருக்கும் சமயம் என்னவாகும் என்றால் இரண்டுமே பாஸிடிவ் சார்ஜாக இருப்பதால் ஒன்றை ஒன்று repel செய்து அணுவே சிதைந்து போய்விடும். இந்த சமயத்தில் தான் neutron என்பது தேவையாய் இருக்கிறது. இது mesons என்னும் ஒரு பொருளை உற்பத்தி செய்து protons ஒன்றை ஒன்று repel செய்வதை தடுத்து விடும். இப்படி உற்பத்தி செய்து தடுக்கும் neutronsக்குள் இருக்கும் force தான் strong nuclear force என்று சொல்கிறோம்.

weak nuclear force என்பது தான் இந்த உலகில் முதல் ஆடம் பாம் என்பதைக் கண்டுபிடிக்க உதவியது எப்படி என்றால் uranium, plutonium போன்ற சில உலோகங்களில் இந்த strong nuclear force என்பது மிகக் குறைவாக இருக்கும்(இதற்கு சில சமயம் குறைவான neutrons இருப்பதும் காரணம் அதாவது 10 protons 8 neutrons போன்று இருப்பது ஆனால் இது மட்டுமே காரணம் இல்லை). ஒரு குறிப்பிட்ட எடையைக் கடந்த இந்த உலோகங்கள் decay ஆக ஆரம்பிக்கும். இந்த அடிப்படையில் தான் nuclear பாம்கள் தயாரிக்கப் படுகின்றன.

யோசித்துப் பாருங்கள் uranium போன்ற உலோகங்களில் இருக்கும் electrons, protons, neutrons தான் நம்முள்ளும் இருக்கிறது. ஒரு nuclear பாம் என்பது வெடித்தால் எவ்வளவு வெப்பம் வெளியாகுகிறது எவ்வளவு எனர்ஜி வெளியாகுகிறது. அவ்வளவு எனர்ஜி நம்முள்ளும் இருக்கிறது. உலகின் எல்லாப் பொருளகளிலும் இருக்கிறது.

ஆனால் இவ்வளவு அதிகமான எனர்ஜி வெளியாகமால் அனைத்தையும் bind செய்து வைக்கும் force தான் strong nuclear force.

சரி அடுத்து electro magnetic force ஒரு அணுவுக்குள் electrons இருக்கிறது அது negative -ve சார்ஜ் உள்ளது அதே சமயம் protons என்பது பாஸிடிவ் சார்ஜ் உள்ளது. இவை ஒன்றை ஒன்று attract செய்து கொண்டால் என்னவாகும் ஒன்றோடு ஒன்று இணைந்து சிதைந்து போகும் அல்லவா? அப்படி சிதைந்து போகாமல் தடுப்பது தான் electro magnetic force.

இந்த electro magnetic force என்பது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. strong nuclear force என்பது nucleus of the atom என்பதற்குள் மட்டும் இருப்பது அது neutronsக்குள் இருப்பது. அது nucleusக்குள் மட்டும் செயல்படும் அதனைத் தாண்டி அதனால் செயல் பட முடியாது. ஆனால் electro magnetic force இந்த பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலுல் பரவி இருப்பது. இதனால் தான் பிரபஞ்சத்தில் atom என்பதே இருக்கிறது. இந்த force இல்லை என்றால் பிரபஞ்சத்தில் atom என்பதே உருவாகி இருக்காது.

இது வரை சொன்னது அனைத்துமே அணுவுக்குள் இருக்கும் forces. அணு என்பது நம்முடைய கண்களுக்கு புலப்படாதது microscopic.

இது போக இருக்கும் இன்னொரு வகையான force தான் புவியீர்ப்பு விசை. இது பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கும் இல்லை பூமி போன்ற கோள்களுக்கும் இடையில் இருக்கும் force. இதனால் தான் பூமியின் நிலப் பரப்பில் நாம் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். அதே போல பூமி சூரியனைச் சுற்றுவது, நிலா பூமியை சுற்றுவது எல்லாமே இதனால் தான்.

இந்த நான்கு forces பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில்

http://en.wikipedia.org/wiki/Four_forces

இங்கு செல்லுங்கள் இதனைப் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்கள்.

சரி இந்த நான்கு force மற்றும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை singularity எனப்படும் பிரபஞ்சத் தோற்றத்தில் தான் தேட வேண்டி இருக்கிறது. singularityயின் போது இந்த நான்கு வகை forceகளும் ஒரே force ஆகத்தான் இருந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள் நான்கு force அதுதான் இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடங்களில் பரவி இருக்கிறது அந்த நான்கு force எல்லாமே ஒரே வகையான force இருந்து உருவானது ஆக மனிதன் மட்டும் அல்ல உலகில் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பது ஒரே வகையான force.

கடவுள் என்பதைப் பற்றி நாம் விவரிக்கும் பொழுது நாம் சொல்வது omnipotent and omnipresent என்று. அதாவது எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர். இதில் இருந்து தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

இவை அனைத்தையுமே இந்த force பற்றியும் சொல்லலாம். எங்கும் இருக்கிறது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. தூணிலும் இருக்கிறது துரும்பிலுல் இருக்கிறது ஆகவே நாம் இறை என்று அறிந்து வைத்திருப்பது இதைத் தானா?

அவனில்லாமல் அணுவும் அசைவதில்லை என்கிறோம். நம் அறிவியல் இன்று நமக்கு சொல்வது இந்த force என்பது இல்லாமல் எதுவுமே கிடையாது ஒரு அணு கூட உருவாகாது எல்லா அணுக்களும் சிதைந்து விடும். ஒன்றுமே உருவாகாது. இதுவும் கூட எனக்கு இந்த forceஐ உருவகிக்கவே பயன் படுவது போல உள்ளது.

இப்படி அறிவியல் பூர்வமாக இன்னும் யோசித்தால் பூமி மற்றும் அதில் இருக்கும் நாம், இருக்கும் அனைத்தையும் இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் influence செய்கின்றன. அதாவது சூரியனின் exert செய்யும் புவியீர்ப்பு விசையால் பூமி சுற்றுகிறது அதே போல பூமியின் புவியீர்ப்பு விசையால் நிலா பூமியைச் சுற்றுகிறது. அதே சமயம் நிலாவின் புவியீர்ப்பு விசை பூமியை அதில் இருக்கும் அனைவரையும் சிறிது influence செய்யும். இதே போல mars, venus போன்றவற்றின் புவியீர்ப்பு விசையும் நம்மை influence செய்யும். இது தான் ஜோதிடமா?

இப்படி எல்லாமே அறிவியல் பூர்வமாக இருந்தால் ராமர் என்பவர் எப்படி வந்தார், அல்லா என்பது யார் இல்லை இயேசு என்பவர் யார்.

இவை எல்லாம் மனிதனின் படைப்பு மற்றும் கற்பனைத் திறன்களால் இல்லை தவறாக புரிதல்களால் உருவானவர்களா?

நிர்மல் எனக்கு Let the force be with you Jedi masters என்று ஒரு பின்னூட்டம் அடித்திருந்தார். star wars படத்தில் வருவது இது. அந்தப் படத்தில் மனிதர்களில் சிலரிடம் forces கண்ட்ரோல் பண்ணும் சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் அவர்கள் பல அரிய காரியங்களைப் பண்ண முடியும் என்றும் காண்பித்திருப்பார்கள். A good science fiction is based on good science என்பார்கள். இது போலவும் சில சமயம் யோசிப்பதுண்டு நம்மால் இது போன்ற நான்கு forcesஐ control செய்ய முடிந்தால் படத்தில் வருவது போல செய்ய முடியும் என்று இந்த உலகில் அற்புதங்கள் எல்லாம் நடப்பதும் சிலர் இந்த forcesஐ அறிந்தோ அறியாமலோ கண்ட்ரோல் செய்வதால் தானா என்றும் யோசிப்பதுண்டு.

அறிவியலும் ஆன்மீகமும் - 5 கூட சின்ன போட்டி

தூணிலும் இருப்பான் துரும்பிலுல் இருப்பான் இறைவன் - ஆன்மீகம்.

ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது உலகமெங்கும் வியாபித்து இருக்கிறது ஒரே வகையான force - அறிவியல்.

Quantum physics என்பது அணு அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி படிக்கும் துறை. காஸ்மாலஜி என்பது சூரியன் அதை விட பெரிய அளவிலான நட்சத்திரங்கள் போன்றவற்றின் ஆராய்ச்சி செய்து இந்த பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி படிக்கும் துறை. இந்த இரண்டுத் துறைகளும் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதை நாம் அறிந்து கொள்ளும் சமயம் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் போன்ற வாக்கியங்கள் அறிவியலால் கூட விளக்க முடியும் என்று தோன்றும்.

இவை அனைத்துமே விஞ்ஞானிகளால் விளக்க முடியாமல், genesis என்று சிலராலும் ஓம்காரத்தில் இருந்து உருவாயிற்று என்று சிலராலும் விளக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பிரபஞ்சத் தோற்றத்தின் போது ஏற்பட்ட singularity சம்பந்தப் பட்டது.

சரி முதலில் quantum physics துறை என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். சில அடிப்படைகளை ஞாபகப் படுத்திக் கொண்டால் quantum physics சொல்வதை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அணு என்பது மூன்று வகையான பொருள்களால் ஆனது என்பது நமக்குத் தெரியும் அதாவது electrons, protons and neutrons. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் இந்த மூன்றின் அடிப்படையிலேயே உருவானது இதில் ஹைட்ரஜன் என்பது 1 proton 1 electron கொண்டது. ஹீலியம் 2 electron, 2 proton, 2 neutron கொண்டது. இவை எவ்வாறு இருக்கும் என்பதை கீழே காணலாம்.
Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

ஹைட்ரஜன் ஹீலியம்

இவை எல்லாம் நம்மில் பலருக்கு தெரிந்தது தான் ஆனால் இதில் ஆச்சர்யப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பதை பலர் யோசிக்கத் தவறி விடுகின்றனர். நமக்குத் தெரியும் opposites attract each other. அதாவது positive charge protons மற்றும் சார்ஜ் எதுவும் இல்லாத இருப்பது neutrons இருப்பது ஒரே nucleus என்று சொல்லப் படும் ஒரே இடத்திற்குள்தான். படத்தில் பார்த்தீர்களானால் ரெட் கலரில் இருப்பதுதான் protons. இவை அனைத்தையும் பிரிக்கும் தூரம் 10^-15 மீட்டர்கள். அப்படி என்றால் ஒன்றை ஒன்று repel செய்து atom என்று சொல்லப்படும் அணுவானது சிதைந்து விட வேண்டும் அல்லவா? ஏன் அப்படி ஏற்படுவதில்லை? அப்படி repel செய்வதால் எல்லா ஆடம்களும் சிதைந்து விட்டால் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?

மேலும் யோசிக்க வேண்டியது electrons இந்த protonsஐ சுற்றி வருகிறது அந்த சமயம் முன்னால் சொன்னவாரே opposites attract each other என்று வைத்துக் கொண்டால் என்னவாகும்? electrons எல்லாவற்றையும் protons இழுத்து எல்லாம் இணைந்து அணு சிதைந்து போக வேண்டும் அப்படி நடந்தாலும் அணுக்கள் சிதைந்து போக வேண்டும் இல்லையா? அப்படி ஒன்றோடு ஒன்று ஈர்ப்பதால் இரண்டும் இணைந்து அணு சிதைந்தாலும் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?

யோசிச்சுப் பாருங்க நாலு பொண்ணுங்களை ஒரே ரூமில தனியா இருக்க முடியாதுன்னு சொல்லறாங்க இங்க அதே போல ஒரே ரூமுக்குள்ள ரொம்ப நெருக்கமா protonsஐ போட்டு அடைச்சு அதை சுத்தி சூப்பரா பையன்களை சுத்த விட்டா என்னவாகும் பொண்ணுங்க எல்லாம் எப்படா மத்த பொண்ணுங்களை விட்டுட்டு பையன்களோட போய் பேசலான்னு நினைப்பாங்க இல்லையா. இப்படி பொண்ணுங்க பொண்ணுங்களுக்கு இருக்கற repelling forceஐ விட பல கோடி மடங்கு repulsive force இருக்கற ரெண்டை ஒரே இடத்திற்குள் அடைத்து. பல கோடி மடங்கு attractive force இருக்கற electronsஐ சுத்த விட்டா என்னவாகும்?

இங்கே தான் ஒவ்வொரு atomக்குள்ளும் இருக்கும் 3 forces வருது. Electro Magnetic Force, Strong Nuclear, Weak Nuclear force.

படத்தில் பார்த்தீர்களானால் red color proton, blue color neutron, கருப்புக் கலர் neutron.

ஹைட்ரஜன் atom பார்த்தீர்களானால் ஒரே proton ஒரே electron மட்டும்தான் இருக்கும். ஏன் அதில் neutron இல்லை என்று யோசித்தீர்களா? ஹீலியத்தில் இரண்டு proton இரண்டு neutron, இரண்டு electron இருக்கிறது.

இதில் போட்டி என்ன என்றால் நான் மேலே சொன்னதில் இருந்து neutronin வேலை என்ன என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கண்டுபிடித்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

மேலும் இந்த forces எப்படி செயல் படுகிறது. இதற்கு எப்படி singularity உடன் தொடர்பு உண்டு அதில் இருந்து எப்படி தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது என்பதை எல்லாம் சொல்கிறேன். அப்படியே fission(hydrogen bomb), fusion(atom bomb) என்பதில் எல்லாம் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் விளக்க முயற்சி செய்கிறேன்.

Wednesday, September 13, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 4

காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.

ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒலியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒலியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒலி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.

ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒலி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒலியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.

அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.

ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.

நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.

All physics equations and laws we have will be broken down during singularity.

Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.

இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.

optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.

இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.

மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.

அறிவியலும் ஆன்மீகமும் - 3

சார்பு நிலைத் தத்துவம் குறித்து மேலும் ஒரு எடுத்துக் காட்டுடன் ஒரு விளக்கம்.

சோமு, ராமு இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ராமு ஒரு ராக்கெட்டில் ஏறி 8 ஒளி வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணப்படும் தொலைவு அதாவது (3,00,000 *60*60*24*365 கிலோமீட்டர்கள்). இருவரிடமும் ஒரு தொலைநோக்கி இருக்கிறது அந்த தொலை நோக்கியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். அந்த நட்சத்திரத்தையும் பார்க்க முடியும். ராமு ராக்கெட்டில் நொடிக்கு 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் என்று வைத்துக் கொள்வோம். ராமு ராக்கெட்டில் கிளம்பும் சமயம் ஜனவரி 1 2000 என்று வைத்துக் கொள்வோம். ஆகவே இந்த நட்சத்திரத்தை அவன் 10 வருடங்களில் சென்றடைவான்.

இங்கு மேலும் ராமுவிடம் ஒரு கடிகாரம், சோமுவிடம் ஒரு கடிகாரம், அந்த நட்சத்திரத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ராமுவும், சோமுவும் இந்த மூன்று கடிகாரங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்றும் வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராமு, சோமுவிடம் உள்ள கடிகாரம் இரண்டும் ஜனவரி ஒன்று 2000 என்று காண்பிக்கும். நட்சத்திரத்தில் இருக்கும் கடிகாரம் 1 ஜனவரி 1992 என்று காண்பிக்கும் ஏனெனில் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் ஒளி நம்மை அடைய 8 ஒளி ஆண்டுகள் பிடிப்பதால் 8 வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து தோன்றிய ஒளிதான் நம்மை வந்து அடைந்திருக்கும். ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

சரி ராக்கெட் கிளம்பும் சமயம் என்னவாகும் என்று பார்க்கலாம். ராமுவுக்கும் இது வரை 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்பொழுது 3,00,000 + 2,40,000 = 5,40,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து சேரும். இது ஏன் என்றால் உங்களை நோக்கி ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது அது 80 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது நீங்கள் அதனை நோக்கி 80 கிலோமீட்டர் வேகத்தில் போகிறீர்கள் என்றால் அந்த ரயில் உங்களை நோக்கி 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது அல்லவா அதாவது அதன் வேகம் அதிகரிக்கவில்லை நீங்கள் வேகமாக போவதால் அதன் வேகம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள் இல்லையா?அது போலத்தான் இதுவும். ராமு ஒளியை நோக்கி 2,40,000 வேகத்தில் பயணம் செய்யும் சமயம் அந்த வெளிச்சம் நம்மை அவ்வளவு வேகமாக வந்தடையும்.

நாம் மேலும் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது டைம் ஸ்பேஸ் டைலேஷன்(time-space dilation) பற்றி. அதாவது நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அந்த அளவு நேரம் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்.இது கண்டிப்பாக ஒத்துக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும் இருந்தாலும் நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்றது போல நாம் பயணம் செய்யும் இடைவெளி குறையும். இதனை Space Warp, Time warp என்று சொல்லுவார்கள். இதற்கு time-space dilation formula என்று ஒன்று உண்டு இதனை வைத்து இதனை கணக்கிடுவார்கள். இந்த எடுத்துக்காட்டில் ராமுவுக்கும் 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால் space-time dilation factor 60% ஆக இருக்கும். அதாவது ராமு இப்பொழுது ராமுவிற்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 60% ஆக குறைந்து விடும்.

இது எப்படி சாத்தியம் என்றால் சாத்தியம்தான். இது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க பட்டுள்ளது. 1970 களில் சில விஞ்ஞானிகள் அடாமிக் கிளாக் எனப்படும் மிக குறைவான நேரத்தை கணக்கிட உதவும் சில கடிகாரங்களை ஒரே நேரத்தைக் காட்டுமாறு synchornize செய்து அதில் சில கடிகாரங்களை பூமியிலும் சில கடிகாரங்களை ஒரு வானவூர்த்தியிலும் எடுத்துச் சென்று சில மணி நேரம் கழித்து வந்த பொழுது வான ஊர்த்தியில் இருந்த கடிகாரங்கள் அனைத்துமே பூமியில் இருந்த கடிகாரங்களை விட சற்று குறைவான நேரத்தில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.குறைந்திருந்த மணித்துளி பார்முலாவின் படி அமைந்திருந்தது.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ஆகவே இப்பொழுது ராமுவுக்கு தொலைவு 60% ஆகி விட்டதால் ராமு 10 வருடங்களுக்கு பதிலாக 6 வருடங்களிலேயே அந்த நட்சத்திரத்தை அடைந்து விடுவான்.

சரி இப்பொழுது ராமு பாதி தூரத்தை கடந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் இப்பொழுது என்னவாகும்?

இப்பொழுது பூமியில் நேரம் 2005 ஆக இருக்கும் ராமுவின் நேரம் 2003 ஆக இருக்கும்.

இங்கு மேலும் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

Dopplers effect

அதாவது நம்மை நோக்கி ஒரு வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு ஹாரன் அடிக்கப் படுகிறது அப்பொழுது நம்மை நோக்கி வருவதால் அந்த சத்தத்தின் அலைகள் நம்மை நோக்கி கொண்டு வருகிறது அதனால் அந்த சத்தம் அதிகமாக இருப்பதாக தோன்றும் அந்த வண்டி நம்மை விட்டு செல்லும் சமயம் அதாவது நம்மைக் கடந்து செல்லும் சமயம் அந்த வண்டியின் சத்தம் அது நம்மை விட்டு விலகிச் செல்வதால் அதிகமாக இருக்காது. இது மீண்டும் ஒரு மிகவும் எளிமை படுத்திச் சொல்லப் பட்ட விளக்கம். ஆனால் இதுதான் டாப்ளர் விதி.

அதோடு மட்டும் அல்லாமல் நம்மை வெளிச்சம் வந்து சேர நேரமாகும் ஆகவேதான் ராமு கிளம்பும் முன் நாம் நட்சத்திரத்தின் நேரம் 1992 ஆக இருந்தது.

இதனால் சோமு 2005ல் பூமியில் இருந்து பார்க்கும் சமயம் சோமுவின் நேரம் 2001 ஆகத்தான் இருக்கும். அதாவது 2001ல் சோமு எந்த தூரத்தில் இருந்தானோ அதுதான் சோமுவுக்கு தெரியும்.

இதே தூரத்தில் இருக்கும் ராமுவுக்கு டாப்ளர் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்கும் விதத்தால் நேரம் 2001 ஆகத்தான் தெரியும்.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ராமு நட்சத்திரத்தை அடைந்த சமயம் திரும்பும் சமயம் நேரம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை அடுத்து விளக்க முயற்சி செய்கிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 2

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.

ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.

பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.

இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.

அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 1

Bubble vs Bang எதோ ஹாலிவுட் திரைப்படத் தலைப்பு போன்று இருந்தாலும், இன்று காஸ்மாலஜி(Cosmology) என்னும் துறையில் இன்று பல மில்லியன் வருடக் கேள்வி இதுதான்.

காஸ்மாலஜி என்பது நம்முடைய பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் துறையாகும். ஐன்ஸ்டீன், நீயூட்டன், ஹாகிங்ஸ் போன்ற அறிவியல் துறையில் மிக புகழ் பெற்று இருக்கும் அனைவருமே இந்த துறையில் ஆராய்ச்சி செய்தே புகழ் பெற்றார்கள்.

இது ஆன்மீகத்துடனும் மிகவும் நெருக்கமான ஒரு துறையாக நாம் கருதலாம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு நாம் இது நாள் வரையிலும் ஏன் இன்று கூட ஆன்மீகத்தையே நாடியுள்ளோம்.

இது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை அறியும் தெரியும் சமயம் நாம் நம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளை நம்முடைய நம்பிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது.

Cosmology என்னும் இத் துறையில் இன்று நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை Hubble என்பவரால் 1929ம் கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றின் அடிப்படையிலேயே நடை பெறுகிறது.

இவரின் கண்டுபிடிப்பே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கே விளக்கியது;-).

இவரின் கண்டுபிடிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன் அது வரை இந்த துறையில் நடந்தது என்னென்ன என்று காணலாம். இந்த துறையின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு எது என்று நாம் அறிய முற்பட்டால் அது காப்பர்னிக்கஸ் இந்த உலகை உருண்டை என்று கண்டு பிடித்தைத் தான் சொல்ல வேண்டும். அது வரை இருந்து வந்த நம்பிக்கையான தட்டை உலகம் என்ற நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் இருந்த கண்டுபிடிப்பாகும் அது.

பின் நீயூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததை சொல்லலாம். புவியீர்ப்பு சக்தி தான் என்பது நாம் இந்த பூமியின் பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்திதான் இந்த சந்திரன் பூமியை சுற்றி வரச் செய்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வரச் செய்கிறது. இது அனைத்தும் தான் ஐன்ஸ்டினின் சார்பு நிலை கண்டுபிடிப்பு வரும் வரை இந்தத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டினுக்கு ஹூபில் எப்படி சார்பு நிலை தத்துவத்தை விளக்கினார். அந்தக் கண்டுபிடிப்பு எப்படி மத நம்பிக்கைகளை மாற்றும் விதமாக உள்ளது.