Thursday, December 07, 2006

செவ்வாய் கிரகத்தில் உயிர்??!!

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்திருக்கலாம் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாளில் இருந்தே செவ்வாய் கிரகம் அறிவியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. பூமி போலவே இதற்கும் பல குண நலன்கள் இருப்பது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பல காலங்கள் வரை செவ்வாயில் உயிர் இனங்கள் கண்டிப்பாக வாழ்ந்து வருகிறது என்று பல விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.

இதன் அடிப்படையில் மிகப் பிரபலமாக பல நாவல்களும் படங்களும் கூட வெளி வந்துள்ளன. வார் ஆப் தி வோர்ல்ட்ஸ்(war of the worlds) என்பது உட்பட பல பிரபலமான படைப்புகள் இதில் அடங்கும்.

கீழே mars attacks என்ற படத்தின் காட்சிகளைக் காணுங்கள்.



Evolution படி பூமியில் முதன் முதலில் உயிர் தோன்றுவதற்கு இருந்த சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவானது என்று அறிந்த பிறகு விஞ்ஞானிகளில் சிலர் செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் இருந்து உயிர் பூமிக்கு வந்திருக்கலாம் என்று கூட சொல்லத் துவங்கினர். இன்றும் கூட இது ஒரு மிகப் பெரிய விவாதத்திற்கு உரிய விஷயமாக பேசப் படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Origin_of_life#.22Primitive.22_extraterrestrial_life

ஆனால் அறிவியல் வளர்ந்து செவ்வாய் பற்றிய நாம் மேலும் அறிய அறிய செவ்வாயில் உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க இந்த விவாதங்கள் conspiracy theory என்ற அளவில் ஒதுக்கி வைக்கப்பட்டது.

ஆனால் இதைப் பற்றிய ஆர்வம் முற்றிலுமாக குன்றி விடவில்லை. அந்த சிகப்பு நிற கிரகத்தின் மேல் எப்பொழுதுமே ஒரு ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

நாசாவுக்கு இருந்த இந்த ஆர்வத்தில் நாசா Path finder(வழி தேடி) என்ற விண்கலத்தை 2003 ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது(உலகமெல்லாம் பசி பட்டினி மனுஷன் சாகறான் இருந்தாலும் இந்த அமெரிக்காவுக்கு செவ்வாயில என்ன இருக்குதுன்னு தான் முக்கியமா போச்சு அந்தக் காசில் உலகில் வறுமை தீர்க்க உபயோகப்படுத்தலாம். ஹீம் பூனைக்கு யார் மணி கட்டறது?).

இந்த விண்கலம் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு செவ்வாய் பற்றிய செய்திகளை நமக்கு தெரிவித்து வருகிறது.

கடந்த வாரத்தில் செவ்வாயில் உயிர் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட தகவல்களை Path finder(வழி தேடி) விண்கலம் நமக்கு அனுப்பி உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்தீர்களானால்





இந்தப் படங்களில் இருந்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இன்னும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள் மேலும் நுண் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக சொல்கிறார்கள்.

இது மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. பூமியில் இருக்கும் உயிர் வேறு கிரகத்தைச் சேர்ந்தது போன்ற பல கருத்துக்களை அப்படியும் இருக்குமோ என்று மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.

3 comments:

குமரன் (Kumaran) said...

மதத்தைப் பத்தி உங்க கருத்தைச் சொல்லாமலேயே இந்தப் பதிவை முடிச்சிட்டீங்களே செந்தில் குமரன். அது ஒரு பெரிய குறை இந்தப் பதிவிற்கு. :-)

கானா பிரபா said...

படங்களோடு நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள் நன்றி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கானா பிரபா, குமரன் வருகைக்கு நன்றி.

குமரன் நல்லா நக்கல் அடிக்கறீங்க, மதம் பற்றி தானே தனியா சொல்லறேன்.