கடவுள், சாமி, இறைவன் இவர்களைப் பற்றிய நம்பிக்கைகளின் வாழ்க்கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒன்று. அவன் இன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையில் இருந்து இன்று Fundamental forces இன்றி அணு கூட இருக்காது என்ற Fact வரை பல மாற்றங்கள். இந்த மாற்றங்கள் அறிவியல் துணை கொண்டு எப்படி மாறியது என்பது தான் இந்தப் பார்வை.
சின்ன வயதில் கையைக் குவித்து இது தான் சாமி இதைக் கும்பிட்டால் நல்லாப் படிப்பு வரும் என்று எனக்கு மட்டுமில்லை பலருக்கும் ஆன்மீகத்தின் அறிமுகம் தங்களுடைய தாயாரின் மூலமே கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். சாமின்னா என்ன என்ற கேள்வியை முதன் முதலில் சொல்லிக் கொடுக்கும் கேட்டேனா என்று தெரியவில்லை. எப்பொழுது கேட்டேன் என்றும் ஞாபகம் இல்லை. ஆனால் வளர வளர புராணக் கதைகள் மூலமாக பல வேறு கடவுள்கள் அறிமுகமானார்கள். பிரம்மா படைப்புக் கடவுள், விஷ்ணு காத்தல், சிவன் அழித்தல் இவைதான் இவர்களது தொழில். இதில் விஷ்ணுதான் கூலான கடவுள், ராமாயணம் டீவியில் வந்ததால் இருக்கலாம் இல்லை ராமர், கிருஷ்ணர் என்று மனிதப் பிறவி எடுத்ததால் இருக்கலாம் ஏனென்று தெரியவில்லை.
இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர்தான் எல்லாம். உலகில் நடைபெறும் அனைத்திற்கும் காரணம் கடவுள்தான் என்பது தான் நம்பிக்கையாக இருந்தது.
பின் கொஞ்சம் கொஞ்சமாக வேற்று மதக் கடவுள்களும் அறிமுகமானார்கள். இயேசு, அல்லா என்று அவர்களைப் பற்றியும் தெரிய வந்தது. கிறிஸ்து என்பவர் இந்த உலகில் வலம் வந்தவர் இறைவனின் புதல்வர் மனிதர்களுக்காக பல துன்பங்களைத் தாங்கியவர் என்றெல்லாம் அறிய முடிந்தது.
சிறு வயதில் எங்கள் பள்ளியில் மாரல் ஸ்டடீஸ் என்ற ஒரு பாடம் உண்டு அதில் ஒரு படம் ஒன்று வரைந்திருப்பார்கள் பல நதிகள் ஒரே கடலில் சென்று கலப்பதைப் போல காட்டி இருப்பார்கள். அதில் ஒவ்வொரு நதிக்கும் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று பெயர் சூட்டி கடலுக்கு GOD என்றும் பெயர் சூட்டி இருப்பார்கள். என் மனதில் அந்தப் படம் அப்படியே பதிந்து விட்டது.
சிறு வயதில் எல்லா மதத்தவரும் அதே போலத் தான் எண்ணி இருப்பார்கள் என்று நினைத்திருந்த சமயம் உண்டு.
ஆனால் நாளாக நாளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முஸ்லீம் கலவரம். கிறிஸ்துவர்கள் ஊர்வலத்தில் இந்துக் கலவரம் என்று செய்திகள் கேட்டு கொஞ்சம் குழம்பிப் போனதுண்டு.
பின்பு தான் அறிவியல் உலகம் என்பது அறிமுகமானது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் போன்ற அறிவியல் பாடங்கள் அது எப்படி நடந்திருக்கலாம் என்று விளக்கிச் சொன்னது வேறு விதமான சில நம்பிக்கைகளை தூண்டி விட்டது.
அறிவியல் என்பது நேர்மையானதாக தோன்றத் துவங்கியது. வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியல் என்பது இயங்கவில்லை என்பதும் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களை என் அறிவுக்கு புரியும் வகையில் விளக்கியது மத நம்பிக்கைகள் கடவுள் நம்பிக்கை மேல் ஐயம் கொள்ள வைத்தது.
சூரியன் என்பது அணு சேர்க்கை(Fission) என்ற தத்துவத்தின் படி இயங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக எனக்கு விளங்கிய அதே நேரத்தில் சூரியன் என்ற ஒரு கதாபாத்திரம் கதைகளில் வருகிறதே அது அப்படியானால் யார் என்று குழம்பி மத நம்பிக்கைகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது.
ஆனால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் அறிவியலால் விளக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் கடவுள் மேல் இருந்த நம்பிக்கைகள் முழுவதுமாக விட்டுப் போய் விடவில்லை.
ஆனால் இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர் எல்லாமே என்ற நம்பிக்கைகள் உடையத் தொடங்கிய காலம் இது. ஆனால் இன்னும் முருகன், ராமர் என்ற அளவிலேயே கடவுளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் இது. இந்த சமயத்திலும் இறைவன் என்பவருக்கு உருவம் என்பது தேவையானதாகவே இருந்திருக்கிறது.
ஆனால் இதே சமயத்தில் பொது அறிவு என்பது வளரத் துவங்கியது. அறிவியல், சரித்திரம் போன்ற அறிவுகள் வளர ஆரம்பித்தன.
அப்பொழுது உலகில் பல பிரச்சனைகளுக்கு காரணம் மதமே என்பது அறிந்து கொண்ட பொழுது மேலும் பல கேள்விகள் எழுந்தன.
சரித்திரம் இந்தியாவும் பாகிஸ்தானும் 1947க்கு முன் ஒரே பெயரால் ஒரே நிலப் பரப்பாக ஒரே பெயரில் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டை தன் ஜன்ம விரோதியாக கருதுகிறது. ஏன் என்று பார்த்தால் மதம்.
இப்படி மனிதனின் வரலாறு என்பது தெரியத் தெரிய மதம் என்பதே மனிதனின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்த சமயத்தில் தான் அறிவியல் என்பது மேலும் பல விஷயங்களை கற்றுத் தர ஆரம்பித்தது. ஒரு விதையில் இருந்து ஒரு மரம் உருவாது செல் என்பது இரட்டிப்பதன் மூலம் என்று கற்றுத் தர இது போன்ற பல விந்தையாக விஷயங்களுக்கு விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன.
மேலும் இதே சமயத்தில் அறிவியல் என்பது நேர்மையானது மட்டும் அல்ல, அடக்கமானது என்பதும் புரிய ஆரம்பித்தது. மதம் போன்று குற்றம் குறைகளே கிடையாது நீ இதனை நம்பு இல்லையா விட்டு விடு என்றெல்லாம் அகங்காரமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையும் குறைவாகவே காணப்பட்டது.
மேலும் மனித குல அழிவு என்று ஒன்று ஏற்படுமானால் அது மதம் என்ற அமைப்பின் காரணமாகவே இருக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது இதைத் தவிர்க்க மதம் என்ற அமைப்பை எதிர்ப்பதே சரியானதாக தோன்றுகிறது.
இதில் கடவுள் நம்பிக்கை என்பது எங்கே இருக்கிறது என்று பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே கடவுள் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் அது மதம் சார்ந்த இறை நம்பிக்கையாக இருக்காது. குரானோ, பைபிளோ இல்லை இந்து மத நூல்களோ காட்டும் நம்பிக்கை சார்ந்த இறையாக இல்லாமல் அறிவியல் காண்பிக்கும் அறிவு சார்ந்த இறைவன் முழுமையானதாகவும் சச்சரவுகள் குறைவானதாகவும் தோன்றுகிறது.
ஏனெனில் அறிவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குல்லா போட்டுக் கொள்ள வேண்டும், பட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.
தேவாரம் பாடப் படும் சமயம் கவியின் சொற் சுவையும், கற்பனைச் சுவையுமே மயக்குகிறதே தவிர அது குறிக்கும் இறைவன் என் அறிவை மயக்குவதில்லை.
Tuesday, October 17, 2006
Sunday, October 08, 2006
இயற்பியல் நோபல் பெருவெடிப்பு கண்டுபிடிப்புகளுக்காக
பெருவெடிப்பு(Big Bang) பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஜான் சி. மாதர்(John C. Mather) மற்றும் ஜார்ஜ் எப். சுமூட்(George F. Smoot) என்ற இருவருக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. பிண்புல கதிர்வீச்சு(Back ground radiation எதோ தெரிந்த அளவில் மொழி பெயர்த்துள்ளேன்) பெரு வெடிப்பின் மூலமே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு அத்தாட்சியாக பல விஞ்ஞானிகளால் இன்று சொல்லப் படுகிறது.
இதில் ஆராய்ச்சி செய்ததற்காகவும் கரும்பொருள்(Black body) என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதற்க்காகவும் இவர்களுக்கு இந்த நோபல் பரிசு கொடுக்கப் பட்டிருக்கிறது.
இன்று பலர் பெரு வெடிப்பு குறித்து பல சந்தேகங்கள் நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் சமய்த்தில் இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

Friday, October 06, 2006
அறிவியலும் ஆன்மீகமும் - 7
காற்றுள்ளே போதே தூற்றிக் கொள் என்பது போல evolution பற்றி சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுதே இன்னொரு வகையான evolution பற்றியும் சொல்லி விடுவது தானே புத்திசாலித்தனம்.
பூமியில் உயிர் எப்படி உருவானது என்பதைப் பற்றி ஆராயும் சமயம் பூமியே எப்படி உருவானது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
பூமி எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் அடிப்படையான அணு(atom) என்பது எப்படி உருவானது எந்த சமயத்தில் உருவானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அணு உருவாகி இருக்கா விட்டால் எதுவுமே உருவாகி பூமி, சூரியன், பால்வெளி, காக்கா, குருவி, நான் எதுவுமே உருவாகி இருக்காது.
அணு கூட உருவாக இருக்க வேண்டுமா என்றால், அணுவுக்குள் இருக்கும் electron, proton, neutron கூட உருவானதுதான் உருமாற்றப்பட்டதுதான்.
கிரிக்கெட் மாட்சில் அடிக்கடி டிரிங்க்ஸ் பிரேக் எடுக்கும் சமயம் ஆட்டத்தை நிறுத்தி வைப்பதைப் போல நாமும் பெருவெடிப்பு(Big bang) நடந்து முடிந்த கொஞ்ச கொஞ்ச நேர இடைவெளியில் டிரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.
முதல் டிரிங்க்ஸ் பிரேக் பெரு வெடிப்பு நடந்து 10^-43 செகண்டில் எடுக்க வேண்டும் இதற்கு முன்னால் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை. ஆக இந்த சமயத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்றால் இன்று நாம் four fundamental forces ஆக கருதும் அனைத்தும் ஒரே force ஆக இருந்தது(four fundamental forces பற்றி இங்கு சொல்ல முயற்சித்திருக்கிறேன்).
அடுத்த pit stop பெரு வெடிப்பு நடந்து முடிந்த 10^2 செகண்டில் எடுக்கப் போகிறோம். இந்த நேரத்தில்(பெரு வெடிப்பு நடந்து 10^-6 to 10^-2 செகண்ட்ஸீக்குள்) தான் protons மற்றும் நியூட்டிரான்ஸ்கள் உருவாகுகிறது. எப்படி உருவாகுகிறது என்பதை அறிய இங்கே செல்லுங்கள்.
அடுத்து கொஞ்சம் நேரம் கழித்து அதாவது பெருவெடிப்பு நடந்து 3 நிமிடங்கள் கழித்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். முதல் முறையாக fundamental force பிரிந்து strong nuclear force தனி force ஆக உருவெடுக்கிறது. இந்த strong nuclear force தனித் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் protons மற்றும் neutrons ஆகியவற்றை இணைத்து முதல் முறையாக ஒவ்வொரு அணுவிலும் காணப்படும் nucleusஐ உருவாக்குகிறது. இந்த சமயத்தில் தான் hydrogen மற்றும் helium nuclei உருவாகுகிறது.
பெரு வெடிப்பு நடந்து முடிந்த இந்த மூன்று நிமிடங்கள் தான் மிக முக்கியம் வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. இந்த மூன்று நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை மட்டும் விளக்க தனிப் புத்தகங்களே உண்டு.
சரி அந்த மூன்று நிமிடங்கள் கழித்து பல வருடங்களுக்கு strong nuclear force ஒன்று மட்டும் தான் தனிக் காட்டு ராஜா. இது அடுத்த 380,000 வருடங்களுக்குத் தொடர்கிறது. இந்த சமயத்தில் பிரபஞ்சம் என்பது atomic nuceli, electrons மற்றும் photons போன்ற நம் கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவ்வளவே.
சரி 380,000 ஆண்டுகளுக்கு பிறகு என்ன ஆனது. இந்த சமயத்தில் இந்தப் பிரபஞ்சம் தேவையான அளவு குளிர்ந்து விட்டதால். fundamental force என்பது மேலும் பிரிகிறது. இப்பொழுது electro magenetic force effectக்கு வருகிறது. இது என்ன செய்கிறது என்றால் தனித் தனி nucleus மற்றும் electrons ஆக இருந்ததை ஒன்று திரட்டி முதல் அணு உருவாகச் செய்கிறது.
அதாவது முதல் அணு என்பது உருவானது இந்த பிரபஞ்சம் என்பது தொடங்கி 380,000 வருடங்கள் கழித்துதான்.
இந்த அணுக்களாலும் எல்லா வகையான பொருள்களும் உருவாகவில்லை. hydrogen மற்றும் helium அணுக்கள் மட்டுமே உருவாகுகிறது.
தங்கம், இரும்பு போன்ற தாதுக்களுக்கான அணுக்கள் உருவாக இன்னும் பல பில்லியன் வருடங்கள் பிடித்தன.
சரி அடுத்த pit stop அல்லது டிரிங்க்ஸ் பிரேக் எடுக்க வேண்டிய நேரம் பெரு வெடிப்பு நடந்து 500,000 வருடங்கள் கழித்து இந்த சமயத்தில் தான் நட்சத்திரங்கள் உருவாகின. இந்த நட்சத்திரங்கள் உருவாக காரணமாக strong nuclear, weak nuclear மற்றும் electro magnetic forces என்பது இப்பொழுது நாம் தனி தனியாக அடையாளம் காண முடிந்தது.
இதே சமயத்தில் தான் கடைசியாக gravitational force என்பது கணக்கில் வந்தது.
சரி பூமி மற்றும் நம் சூரிய மண்டலம் எப்பொழுது உருவானது என்றால் பெருவெடிப்பு நடந்து 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து.இந்த சமயத்தில் தான் சூரியன் உருவானது. அதனுடைய gravitional pullலால் ஈர்க்கப்பட்டு அதனைச் சுற்றி கிரகங்கள் உருவானது எல்லாமே.
ஆக பூமி ஏழு நாளிலோ இல்லை 6 நாளிலோ இல்லை முட்டைக்குள் இருந்தோ உருவாக்கப்படவில்லை.
பூமி என்பது பிரபஞ்சம் தோன்றி 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து உருவானது.
இவை நிரூபிப்பது ஒன்றுதான் என் மதம் சொல்வது எல்லாமே சரிதான் என்று நம்பி என மதம் உயர்ந்தது என்று யோசிப்பவர் அனைவருக்கும் உங்கள் மதத்திலும் ஓட்டைகள் இருக்கின்றன ஆகவே எதன் அடிப்படையில் பிரச்சனைகளை புரிந்து கொண்டிருக்கிறாயோ அவை அத்தனையுமே ஒரு தவறான நம்பிக்கையின் அடிப்படையில் கூட உருவாகி இருக்கலாம். ஆகவே என் மதம் உயர்ந்தது உன் மதம் உயர்ந்தது என்றெல்லாம் யோசிக்க கூட செய்யாதே.
இருப்பினும் இந்த பிரபஞ்சத் தோற்றத்திலும் சில விஷயங்களை ஆச்சர்யமூட்டத் தவறுவதில்லை.
உதாரணத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் மேட்டர், ஆன்டி மேட்டர் என்பது ஒன்றாகவே உருவானது. அதாவது electrons என்பது உருவான அதே சமயம் தான் positrons(protons அல்ல protons என்பது electronsஐ விட எடை மற்றும் வேறு சில தன்மைகளில் மாறு பட்டு இருக்கும் ஆனால் positrons என்பது electronsன் எல்லாத் தன்மைகளையும் பெற்று அதே சமயம் +ve charge கொண்டவை.) உருவானது. இவை இரண்டும் ஒரே அளவில்தான் உருவானவை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கினால் anhillation எனப்படும் சிதைவு ஏற்பட்டிருக்கும். ஆனால் எதனாலோ எல்லா positronsம் electrons உடன் சேர்ந்து anhillate ஆகாமல் கொஞ்சம் electrons எப்படியோ தப்பிப் பிழைத்ததால் தான் இன்று இந்தப் அணுக்கள் என்பது உருவானது மேலும் இந்தப் பிரபஞ்சம் இன்று உள்ளது போல இன்று இருக்கிறது.
இன்று நம் பிரபஞ்சத்தில் இந்த anti matter என்பதை நாம் black holesல் மட்டுமே பார்க்க முடியும். வேறு எந்த இடத்திலும் இந்த anti matter நம் பிரபஞ்சத்தில் இருக்காது.
anti matter என்பது எல்லா மேட்டருக்கும் இருப்பது.
electrons - positrons(+ve electrons)
protons - anti protons(-ve protons)
hydrogen - anti hydrogen
hydrogen என்பது 1 electron 1 proton கொண்டது.
anti hydrogen - 1 positron ஒரு anti proton கொண்டது.
anti hydrogen பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.
http://en.wikipedia.org/wiki/Antihydrogen
இப்படி எல்லா மேட்டர்களுக்குமே எதிர்வினையாக ஒன்றோடு ஒன்று இணைந்தால் annihilation ஆகக் கூடியதுதான் anti matter.
இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தின் பொழுது எல்லாமே anti matter உடன் தான் படைக்கப்பட்டது. ஆனால் matter என்பது அதிகமாக இருந்ததாலோ இல்லை வேறு அறியப் படாத காரணங்களாலோ எல்லா anti matterகளும் அழிந்து விட்டன.
இன்று மிக மிகக் குறைவான அளவில் உருவாகும் anti matterம் உடனே matter உடன் சேர்ந்து annihilate ஆகி விடும்.
இந்த பிரபஞ்சத்தில் anti matter நிறைந்து matter என்பது இல்லாமல் இருக்கும் ஒரே இடம் black holes. எல்லா black holesலும் இல்லை ஆனால் சில black holesகளில் anti matter அதிகமாக இருப்பதால் matter என்பது அழிந்து விடும்.
இந்தப் பிரபஞ்சத்தில் அப்பால் anti matter என்பது இருக்கலாம்.
ஏன் anti matter இல்லாமலும் matter மட்டும் நிறைந்தும் காணப்படுகிறது என்பதை Greatest Unsolved problems in physics என்று தொகுத்திருக்கிறார்கள் wikipediaவில்
http://en.wikipedia.org/wiki/Unsolved_problems_in_physics
http://en.wikipedia.org/wiki/Baryogenesis
இது ஏன் என்று விளக்கம் இன்று நம்மிடையே இல்லை. இது தான் இறை ஆற்றல் என்றால் அந்த இறை ஆற்றலுக்கு அல்லா, ராமர், இயேசு என்று பெயரிடுவது முட்டாள்தனமானது.

Subscribe to:
Posts (Atom)