தூணிலும் இருப்பான் துரும்பிலுல் இருப்பான் இறைவன் - ஆன்மீகம்.
ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது உலகமெங்கும் வியாபித்து இருக்கிறது ஒரே வகையான force - அறிவியல்.
Quantum physics என்பது அணு அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி படிக்கும் துறை. காஸ்மாலஜி என்பது சூரியன் அதை விட பெரிய அளவிலான நட்சத்திரங்கள் போன்றவற்றின் ஆராய்ச்சி செய்து இந்த பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி படிக்கும் துறை. இந்த இரண்டுத் துறைகளும் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதை நாம் அறிந்து கொள்ளும் சமயம் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் போன்ற வாக்கியங்கள் அறிவியலால் கூட விளக்க முடியும் என்று தோன்றும்.
இவை அனைத்துமே விஞ்ஞானிகளால் விளக்க முடியாமல், genesis என்று சிலராலும் ஓம்காரத்தில் இருந்து உருவாயிற்று என்று சிலராலும் விளக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பிரபஞ்சத் தோற்றத்தின் போது ஏற்பட்ட singularity சம்பந்தப் பட்டது.
சரி முதலில் quantum physics துறை என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். சில அடிப்படைகளை ஞாபகப் படுத்திக் கொண்டால் quantum physics சொல்வதை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அணு என்பது மூன்று வகையான பொருள்களால் ஆனது என்பது நமக்குத் தெரியும் அதாவது electrons, protons and neutrons. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் இந்த மூன்றின் அடிப்படையிலேயே உருவானது இதில் ஹைட்ரஜன் என்பது 1 proton 1 electron கொண்டது. ஹீலியம் 2 electron, 2 proton, 2 neutron கொண்டது. இவை எவ்வாறு இருக்கும் என்பதை கீழே காணலாம்.
ஹைட்ரஜன் ஹீலியம்
இவை எல்லாம் நம்மில் பலருக்கு தெரிந்தது தான் ஆனால் இதில் ஆச்சர்யப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பதை பலர் யோசிக்கத் தவறி விடுகின்றனர். நமக்குத் தெரியும் opposites attract each other. அதாவது positive charge protons மற்றும் சார்ஜ் எதுவும் இல்லாத இருப்பது neutrons இருப்பது ஒரே nucleus என்று சொல்லப் படும் ஒரே இடத்திற்குள்தான். படத்தில் பார்த்தீர்களானால் ரெட் கலரில் இருப்பதுதான் protons. இவை அனைத்தையும் பிரிக்கும் தூரம் 10^-15 மீட்டர்கள். அப்படி என்றால் ஒன்றை ஒன்று repel செய்து atom என்று சொல்லப்படும் அணுவானது சிதைந்து விட வேண்டும் அல்லவா? ஏன் அப்படி ஏற்படுவதில்லை? அப்படி repel செய்வதால் எல்லா ஆடம்களும் சிதைந்து விட்டால் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?
மேலும் யோசிக்க வேண்டியது electrons இந்த protonsஐ சுற்றி வருகிறது அந்த சமயம் முன்னால் சொன்னவாரே opposites attract each other என்று வைத்துக் கொண்டால் என்னவாகும்? electrons எல்லாவற்றையும் protons இழுத்து எல்லாம் இணைந்து அணு சிதைந்து போக வேண்டும் அப்படி நடந்தாலும் அணுக்கள் சிதைந்து போக வேண்டும் இல்லையா? அப்படி ஒன்றோடு ஒன்று ஈர்ப்பதால் இரண்டும் இணைந்து அணு சிதைந்தாலும் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?
யோசிச்சுப் பாருங்க நாலு பொண்ணுங்களை ஒரே ரூமில தனியா இருக்க முடியாதுன்னு சொல்லறாங்க இங்க அதே போல ஒரே ரூமுக்குள்ள ரொம்ப நெருக்கமா protonsஐ போட்டு அடைச்சு அதை சுத்தி சூப்பரா பையன்களை சுத்த விட்டா என்னவாகும் பொண்ணுங்க எல்லாம் எப்படா மத்த பொண்ணுங்களை விட்டுட்டு பையன்களோட போய் பேசலான்னு நினைப்பாங்க இல்லையா. இப்படி பொண்ணுங்க பொண்ணுங்களுக்கு இருக்கற repelling forceஐ விட பல கோடி மடங்கு repulsive force இருக்கற ரெண்டை ஒரே இடத்திற்குள் அடைத்து. பல கோடி மடங்கு attractive force இருக்கற electronsஐ சுத்த விட்டா என்னவாகும்?
இங்கே தான் ஒவ்வொரு atomக்குள்ளும் இருக்கும் 3 forces வருது. Electro Magnetic Force, Strong Nuclear, Weak Nuclear force.
படத்தில் பார்த்தீர்களானால் red color proton, blue color neutron, கருப்புக் கலர் neutron.
ஹைட்ரஜன் atom பார்த்தீர்களானால் ஒரே proton ஒரே electron மட்டும்தான் இருக்கும். ஏன் அதில் neutron இல்லை என்று யோசித்தீர்களா? ஹீலியத்தில் இரண்டு proton இரண்டு neutron, இரண்டு electron இருக்கிறது.
இதில் போட்டி என்ன என்றால் நான் மேலே சொன்னதில் இருந்து neutronin வேலை என்ன என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
கண்டுபிடித்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.
மேலும் இந்த forces எப்படி செயல் படுகிறது. இதற்கு எப்படி singularity உடன் தொடர்பு உண்டு அதில் இருந்து எப்படி தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது என்பதை எல்லாம் சொல்கிறேன். அப்படியே fission(hydrogen bomb), fusion(atom bomb) என்பதில் எல்லாம் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் விளக்க முயற்சி செய்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
குமரன்...!
ரேஞ்ச் எங்கே போவுது !
போகும் போக்கைப் பார்த்தால் ஆசிரம் ஆரம்பித்து, குமரநந்த அடிகளார் ன்னு சொல்லவச்சிடுவிங்க போல இருக்கே.
கட்டுரையைப் பார்க்கும் போது பெண் சிஷ்யைகளுக்கு முன் உரிமை கிடைக்கும் போல் தெரிகிறது.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குமரநந்தா !
ஏங்க கேள்வி கேட்டிருக்கேன் பதில் சொல்லாமா உங்களைஅஅஅஅ பதிலைச் சொல்லுங்க.
ஆனா பேர் நல்லா தாங்க இருக்கு குமராநந்தா
The two protons in helium will tend to repel each other
To prevent that from happening is why we have neutron which is neutral in charge.
Anitha Pavankumar உங்களுடைய ஆன்சர் சரி. ஆனால் விளக்கம் சற்று தவறு. ஆனால் நீங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் ஆடம் பாம் என்பது செயல்படுகிறது.
இரண்டு புரோட்டான் இருக்கும் ஒரு அணுவில் ஒன்றையொன்று எதிர்ப்பு விசையால் விலக்காமல் இருக்க நியூட்ரான் பயன்படலாம் என்று நினைக்கிறேன். அதனால் இரண்டு புரோட்டான், இரண்டு எலக்ட்ரான் இருக்கும் அணுவில் இரண்டு நியூட்ரான் இருக்கிறது, ஒரு புரோட்டான், ஒரு எலக்ட்ரான் இருக்கும் அணுவில் நியூட்ரான் இல்லை.
oh okay
but where is my parisu
answer correctnu sollitinga illa ;)
ஏங்க குமரன்....ரெண்டு புரோட்டனும் இணையாது தவிர்ப்பது தான் இந்த புரோட்டானகளோ?... அதாவது பியுஷன் பாம்?.
தெரியலங்க....பிசிக்ஸ் எல்லாம் படித்து ரொம்ப வருடங்களாச்சு.....
இனி என்வீட்டு கவிதைக்கு (டொண்டு பதிவில் உங்கள் எழுத்து, நன்றாக ரசித்தேன்) சொல்லிக்கோடுக்கத்தான் படிக்க வேண்டும்....
ஆனா ஆன்மிகத்தினை காணோமேங்க?...இனி வருமோ?.
ரியோ நீங்க சொல்றது லாஜிக்கலா கரெக்ட். அதை அறிவியல் பூர்வமா எப்படி செயல் படுதுங்கறதை அடுத்த பதிவில் விளக்க முயற்சி செய்யறேன்.
பரிசுதானங்க நம்ம கைப்புள்ள கொஞ்ச நாளைக்கு முன்னாடி online sweet கொடுத்தார் அங்க போய் என் பேரைச் சொல்லி எடுத்துக்கோங்க.
குமரன்
அவனின்றி அனுவும் அசையாது
குமரன்
அவனின்றி அனுவும் அசையாது
இயற்பியல் பாடத்துல ஏழு அரியர் வச்ச நம்மகிட்ட கேட்டீங்கன்னா ...
ஒன்னும் தெரியல்லீங்கன்னா..நீங்களே சொல்லிடுங்க..
குமரன், அடிப்படையான க்வாண்டம் இயற்பியல் funda. ஆனா இதை அன்மீகத்தோட எப்படியோ தொடர்பு படுத்தி ஜல்லியடிக்கப் போறீங்கன்னு தெரியுது.
Richard Feynman-ன் Six Easy Pieces படித்திருக்கிறீர்களா? பல க்வாண்டம் விஷயங்களை எந்த விதமான தத்துவ, ஆன்மீக சிக்கல்களுக்கும் போகாமல் நேரடி அறிவியல் தளத்திலேயே விவரிக்கிறார். இந்த நூலின் முதல் கட்டுரையில் "பால் கொதிக்கிறது, அதன் மேல் ஊதுகிறீர்கள், ஊதும்போது சூடான காற்று தான் வருகிறது, ஆனால் பாலை ஆறவைக்கிறது" அதை அருமையாக விளக்கியிருப்பார்.
கரெக்ட் பதில் சொன்ன அனிதாவும், ரியோவும் இங்க போய் online sweet எடுத்துக்கோங்க.
ஆமாங்க மௌல்ஸ் இனிமே தான் வரும்.
என்னார் ஐயா அவன் யார் என்பது தான் என் தேடலே சிவனா, அல்லாவா இல்லை இயேசுவா இல்லை இவர்கள் யாருமில்லாத ஒரு இறை இந்த உலகில் இருக்கிறதா? சிலர் மதத்தின் மூலமா தேடுகிறார்கள் நான் அறிவியலில் தேடுகிறேன்.
ரவி தன்னடக்கம் ஜாஸ்தி உங்களுக்கு.
ஜடாயு படிச்சதில்லீங்க படிக்கணும். நீங்க சொன்ன உடனே கூகிளில் தேடிப் பார்த்தேன் நல்ல புக் மாதிரி தான் முடிந்தால் வாங்கிப் படிக்கிறேன். ஜல்லி அடிப்பது எல்லாம் நோக்கம் இல்லை. எந்த மதம் சொல்லும் கடவுளையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை ஆகவே அறிவியலில் எங்காவது இருக்கிறாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன். Science and Religion are 2 ways of understanding the same truth. I have lost faith in religion so I am trying the other way around.
// நல்ல புக் மாதிரி தான் முடிந்தால் வாங்கிப் படிக்கிறேன் //
படிங்க. அதோடு surely you're joking Mr. Feynman-ம் கூடப் படிங்க. இரண்டுமே அறிவியல் ஆர்வலர்களுக்கு நல்ல தீனி போடும். Forum Mall Landmark-ல் கிடைக்கும்.
// எந்த மதம் சொல்லும் கடவுளையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை ஆகவே அறிவியலில் எங்காவது இருக்கிறாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் //
தேடல் தொடரட்டும்.
Sir. Arthur Clarke-ன் The Final Odyssey அறிவியல் புனைகதையில் (இதுவும் அருமையான புக்குங்க), Dr. Chandra என்று ஒரு top-notch அறிவியல் அறிஞர் சில உலோகசி சிலைகள் முன் அமர்ந்து தியானம் செய்வதாக வரும். ஏன் என்று மற்ற அறிஞர்கள் கேட்க, அவர் சொல்லும் பதில்கள் சுவையாக இருக்கும்.
(இந்த பாத்திரம் டாக்டர். சர்.சி.வி. ராமன் பேரர் Black hole புகழ் டா.சுப்பிரமணியம் சந்திரசேகரின் நினைவில் படைக்கப் பட்டதாக பின்னுரையில் க்ளார்க் கூறியிருந்தார்.)
கடவுள் என்பதை ஆபிரகாமிய மதங்கள் பார்ப்பது போல ஒரு "person" என்று பார்த்தால் தான் இந்த "ஒப்புக் கொள்வது" போன்ற விஷயங்கள் வருகின்றன.
தத்துவம் என்ற பார்த்தால் பிரசினை இருக்காது என்று நினைக்கிறேன்.
"தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே"
- திருமந்திரம்
ஜடாயு நிறைய புத்தகங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். புத்தகங்களை வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் படிக்கிறேன்.
space odyssey கேள்விப் பட்டதுண்டு The Final Odyssey கேள்விப்பட்டதில்லை.
person தத்துவம் எப்படிப் பார்த்தாலும் எல்லாத்ததிலேயும் பிரச்சனைதான். அதுதான் ஹிந்துயிசம், இஸ்லாம், கிறிஸ்துவம் எல்லாத்தையும் ஒதுக்கீட்டு அறிவியலால் விளக்க அறிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன்.
முடியல கடவுளே கிடையாதுன்னு மூட்டை கட்டி வைச்சிற வேண்டியதுதான். மத்தபடி மத ரீதியா எதையும் என்னால் personala ஒத்துக்க முடியல.
உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இலை
- கவியரசர் கண்ணதாசன்
கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
- கவிஞர் வாலி
வாங்க வாத்தியாரய்யா நீங்க சொல்றதை மாணவன் நான் எப்படி மறுப்பேன். இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன் ஆனால் எங்கிருக்கிறான் என்பது தான் எனக்கு தெரியல.
குமரன்,
மிக அருமையான் பதிவு.
நல்ல நல்ல பதிவா தருகிறீர்கள்..
தொடர்ந்து தாருங்கள்..
மிக்க நன்றி
குமரன் ரொம்ப யோசிச்சு பார்த்தேன். ஒன்னெமே புரியலே, ஹீ ஹீ பதிலே அனிதா சொல்லீட்டாங்க, அப்பிடியும் விளங்கலே என்னோட சின்ன அறிவுக்கு.... :-))))
//இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன் ஆனால் எங்கிருக்கிறான் என்பது தான் எனக்கு தெரியல.
//
நமக்குள்ளும் நம்மை சுற்றி உள்ள அனைத்து நல்ல இதயங்களிலும் இருக்கிறான் ;)
உங்களூக்குள்ளேயே இறைவன் இருக்கிறான்
ஏன் வெளியே தேடுகிறீர்கள்?
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
உங்கள் உள்ளத்திற்குள்ளும்
இல்லாமலா போய்விடுவான்?
அதைத்தான் ஒரு ஞானி இப்படிச் சொன்னான்:
When God is with me - who can be against me!
Am I correct Mr.Kumaran?
சிவபாலன் நன்றி. உள்குத்து எதுவும் இல்லை என்று நம்புகிறேன் :-))).
ராம் என்ன இப்படி சொல்லிப்புட்டீங்க?
வாத்தியார் ஐயா அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் எனக்குள்ளும் கண்டிப்பாக இருப்பார் என்றே நம்புகிறேன். இங்க டாபிகிற்கு ஏற்றா மாதிரி சொல்லி இருக்கீங்க. அங்கிங்கு எனாதபடி நிறைந்திருப்பது ஒரு வகையான force தான். அதைத் தான் விளக்க முயற்சி செய்துகிட்டிருக்கேன்.
உண்மைதான் வெட்டிப் பயல் நன்றி.
நிர்மல் வருகைக்கு நன்றி jedi masters மற்றும் force பத்தி அடுத்த பகுதியில் எழுதணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் நீங்களும் ஞாபகப் படுத்தினீங்க அடுத்த பகுதியில் அதைப் பத்தியும் எழுதி இருக்கேன்.
attendance மட்டும் போட்டுக்கிறேன்.
ப்ரசண்ட் சார்...
நேற்று இரவு கூட ஹைட்ரஜன் அனுக்களை எப்படி எரிபொருளாக பயன்படுத்தலாம் என்று நீண்ட விவாதம் நடந்தது...
அருமையாக எழுதி இருக்கிறீங்க குமரன்.
செந்தில் குமரன். உங்கள் கேள்விக்கு விடை தெரியவில்லை. நிறைய பேசுவதற்கு இந்தப் பதிவில் அடித்தளம் அமைத்திருக்கிறீர்கள். அடுத்தப் பதிவுகளைப் படித்துத் தெரிந்துகொள்கிறேன்.
Post a Comment