Wednesday, January 17, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 14

முதல் பகுதி

சென்ற பகுதியின் நினைவுகூறல். பிரமாண்ட கரும்பள்ளங்களைக் கண்டுபிடிக்க இந்த பிரபஞ்சத்தின் பிரகாசமான பகுதிகளான குவேசார்களை(quasar) விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்தார்கள். அவர்கள் அந்தப் பகுதிகளை ஆராயக் காரணம், அங்கு வெளியாகும் பிரகாசம் பல நட்சத்திரங்கள் சூப்பர் நோவா என்ற முறையில் வெடித்துச் சிதறுவதால் ஏற்படுகிறது. இப்படி பல நட்சத்திரங்கள் மிக விரைவில் அழிக்கக் கூடிய சக்தி ஒன்று அந்த குவேசார்களில் இருக்க வேண்டும் என்று கணித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்த சக்தி பிரமாண்டமான கரும்பள்ளங்களாக இருக்க வேண்டும் என்று கணித்து குவேசார்களை ஆராயத் தொடங்கினர்.

ஆலன் டிரெஸ்டர்(Alan Dressler) என்பவர் தான் அந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர்.

கரும்பள்ளங்களை நேரடியாக கண்டு கொள்வது என்பது மிகக் கடினமான செயலாகும். வெளிச்சத்தை உமிழாத, பிரதிபலிக்காத பொருளை அடையாளம் கண்டு கொள்வது என்பது முற்றிலும் இயலாத காரியமாகும்.

சாதாரண வகை கரும்பள்ளங்களை அவற்றில் இருந்து வெளிப்படும் கதிர் வீச்சு கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஆனால் quasar போன்ற மிக வெப்பமான பிரகாசமான இடத்தில் இருந்து பல விதமான கதிர் வீச்சுக்கள் வெளிப்படும். அவற்றின் நடுவில் இருப்பதாக கருதப்படும் பிரமாண்ட கரும்பள்ளங்களில் இருந்து கதிர் வீச்சுக்கள் வருகிறதா என்பதை கண்டு கொள்ளவே முடியாது.

ஆகவே பிரமாண்ட கரும்பள்ளங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் அது இருப்பதால் அதன் புவியீர்ப்பு விசையின் பாதிப்பால் அதனைச் சுற்றி இருக்கும் நட்சத்திரங்கள் எப்படி சுழல்கிறது எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.

சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் சுற்றி வருகிறது இல்லையா? அதே போல அந்த பிரமாண்டமான கரும்பள்ளங்களை நட்சத்திரங்கள் சுற்றி வரும் என்றும், அந்த பிரமாண்ட கரும்பள்ளுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் மிக வேகமாக சுற்றி வரும் என்றும் கணித்தார்கள்.

அப்படி வேகமாக சுற்றி வந்தால் அங்கே பிரமாண்டமான கரும்பள்ளங்கள் இருப்பதை நிரூபணம் செய்து விட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தார்கள்.

இப்படி முடிவு செய்த ஆராய்ச்சியாளர்கள் இரு அண்டவெளிகளை கவனிக்க முடிவு செய்தார்கள். quasar அண்டவெளி ஒன்றையும், நமது பக்கத்தில் இருக்கும் அண்டவெளியான ஆண்டிரோமீடா(Andromeda) அண்டவெளியையும் கவனிக்க முடிவு செய்தார்கள்.

இந்த இரு அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி போன்றவற்றை ஒப்பிட்டு முடிவுகளை வெளியிடலாம் என்றும் முடிவு செய்தார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களை ஆச்சிரியத்துக்குள்ளாக்கியது.

quasar அண்டவெளிகளில் இருக்கும் நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி எதையும் அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்களால் முடியவில்லை.

நமக்கு மிக அருகில் இருக்கும் அண்டவெளியான ஆண்டிரோமீடியாவில் இருக்கும் நட்சத்திரங்களின் நகர்வு, சுழற்சி போன்றவை தான் இவர்களை ஆச்சரியப்படுத்தியது.

ஒரு பிரமாண்ட கரும்பள்ளம் அண்டவெளியின் நடுவில் இருந்தால் நட்சத்திரங்கள் எப்படி சுழலும், எப்படி நகரும் என்று கணித்திருந்தார்களோ அந்த கணிப்பிற்கு ஏற்றவாரே அவை அமைந்திருந்தது.

இது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் மட்டும் அல்ல அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. இதனை யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

இந்தக் கண்டிபிடிப்பினால் ஆராய்ச்சியாளர்களுக்கு எழுந்த முதல் கேள்வி, ஏன் Quasar அண்டவெளிகளில் நிகழ்வது போல நட்சத்திரங்கள் அழிவு, வெப்பம், பிரகாசம் போன்றவை ஆண்டிரோமீடா அண்டவெளியில் ஏற்படவில்லை நிகழவில்லை என்பது தான்.

ஆனால் இதனைப் பற்றி மேலும் ஆராய ஆரம்பித்த போது இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய ஆரம்பித்தது.

ஆண்டிரோமீடா அண்டவெளியில் இருக்கும் கரும்பள்ளம் ஒரு காலத்தில் Quasar அண்டவெளியில் நடப்பது போல பல நட்சத்திரங்களை தன்னுள் இழுத்துக் கொண்டிருந்தக் வேண்டும் என்பதை கண்டறிந்தார்கள். அப்படி இழுத்து கொண்டே இருந்த கரும்பள்ளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை அடைந்த உடன், அந்த கரும்பள்ளங்களில் நடுவில் இருக்கும் சிங்குலாரிட்டி(Singularity) நிலை ஏற்படுத்தும் பாதிப்பு கரும் பள்ளங்களின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க குறைய ஆரம்பித்து இருக்க வேண்டும். அதனால் எல்லாவற்றையும் அதனுள் இழுத்துக் கொள்வது நின்று அதன் புவியீர்ப்பு விசையால் நட்சத்திரங்கள் அதனை சுற்றி வரத் துவங்கி இருக்க வேண்டும் என்றும் கண்டு உணர்ந்தார்கள்.

இந்த செய்தியை இந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட சமயம் பலத்த சலசலப்பு உண்டானது. பலர் இந்தக் கண்டுபிடிப்பு எந்த அளவு சரியானது என்பது போன்ற கேள்விகள் எழுப்பத் துவங்கினர்.

இதனால் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இது போன்ற மேலும் சில அண்டவெளிகளில் இருக்கும் பிரமாண்ட கரும்பள்ளங்களை கண்டு பிடித்து வெளியிட வெண்டியது அவசியமானது.

ஆகவே இவர்கள் மேலும் பல அண்டவெளிகளில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்கள்.

இங்கும் இவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

ஏதோ மேலும் ஒரு அண்டவெளியையாவது கண்டுபிடிக்கலாம் என்று ஆரம்பித்த ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் ஆராய்ச்சி செய்த எல்லா அண்டவெளிகளிலும் பிரமாண்ட கரும்பள்ளங்கள் கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள்.

இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்ட உடன் விஞ்ஞான உலகம் இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள ஆரம்பித்தது.

பலர் இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள்.

இவர்களில் சிலர் நம் சொந்த அண்டவெளியான பால் வீதியின் நடுவிலும் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவர்களுக்கு இங்கே மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

நம் சூரிய மண்டலத்தின் மொத்த சுற்றளவை விட பெரிய கரும் பள்ளம் ஒன்றை நம் பால் வீதியின் நடுவில் கண்டு பிடித்தார்கள்.

பல பில்லியன் சூரியனின் எடை கொண்ட இந்த கரும்பள்ளம் Sgr A* என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் அண்டவெளிகளின் தோற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை பாதித்துள்ளது. அண்டவெளிகள் இதற்கு முன்னால் ஒரு மிகப் பெரிய வாயு மேகம் ஒன்றில் இருந்தே தோன்றி இருக்கலாம் என்று கணித்திருந்தார்கள்.

இன்று எல்லா அண்டவெளிகளிலும் இருக்கும் பிரமாண்டமான கரும்பள்ளங்கள் இதனைப் பற்றி ஆராய்ச்சிகளுக்கு புது வெளிச்சம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

இப்போது அண்டவெளிகளின் தோற்றத்தில் இந்த பிரமாண்ட கரும்பள்ளங்களுக்கு இருக்கும் தொடர்பை ஆராயந்து வருகிறார்கள்.

இது பற்றி அறுதியிட்டு கூறும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகள் நம்மிடையே இல்லை.

இருப்பினும் draft நிலையில் இருக்கும் இந்த ஆராய்ச்சி எப்படி செல்கிறது என்றால்

ஒரு மிகப் பெரிய நட்சத்திரம் ஒரு மிகப் பெரிய வாயு மேகத்துடன் மோதினாலோ இல்லை வேறு நட்சத்திரங்களுடன் மோதும் சமயம் ஏற்படும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் ஒரு கரும்பள்ளமாக உருமாறி தன்னைச் சுற்றி இருக்கும் வாயுக்கள் நட்சத்திரங்கள் என்று எல்லாவற்றையும் இழுக்க ஆரம்பிக்கிறது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக ஆரம்பிக்கும் கரும்பள்ளங்களைச் சுற்றி நட்சத்திர மண்டலங்கள் அப்படியே தோன்றி இன்று இருக்கும் அண்டவெளிகளாகி இருக்க வேண்டும் என்பது போல செல்கிறது.

இது இன்னும் ஆராய்ச்சிப் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை ஆனால் இது மிகச் சமீப கண்டுபிடிப்பு என்பதால் இது பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.

பின் குறிப்பு

ஒரு சிறிய உதவி வேண்டி இந்தப் பின்குறிப்பு. இந்தப் பதிவைப் பல நாட்களாக எழுதி வருகிறேன். இன்னும் பல விஷயங்களை எழுதலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

ஆகவே சின்ன feedback வேண்டி இந்தப் பின்னூட்டம். இந்தப் பதிவு எப்படி செல்கிறது எப்படி செல்லலாம் என்பதைக் குறித்து எனக்கு தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

American Idol ஜட்ஜ் simon cowell போல Apprentice donald trump போல நேரடியாக முகத்தில் அடிப்பது போல நான் செய்து வரும் தவறுகளை, இன்னும் சிறப்பாக செய்யலாம், எதனைச் செய்யக் கூடாது என்று நீங்கள் கருதுவதை கூறினால் மிக உபயோகமாக இருக்கும். ஆகவே இந்த சின்ன உதவியை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

15 comments:

சீனு said...

//அதே போல அந்த பிரமாண்டமான கரும்பள்ளங்களை நட்சத்திரங்கள் சுற்றி வரும் என்றும், அந்த பிரமாண்ட கரும்பள்ளுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரங்கள் மிக வேகமாக சுற்றி வரும் என்றும் கணித்தார்கள்.//

சுற்றி வரும் என்றால், elliptical-ஆகவா? அல்லது spiral-ஆகவா? காரணம், இப்படி சுற்றி வரும் நட்சத்திரங்கள் spiral-ஆக சுற்றி சுற்றி வந்து கடைசியில் கரும்பள்ளங்களில் ஐக்கியமாகும் என்று படித்திருக்கிறேன் (காரணம், கரும்பள்ளங்களின் புவியீர்ப்பு விசை தான்).

//அதனால் எல்லாவற்றையும் அதனுள் இழுத்துக் கொள்வது நின்று அதன் புவியீர்ப்பு விசையால் நட்சத்திரங்கள் அதனை சுற்றி வரத் துவங்கி இருக்க வேண்டும் என்றும் கண்டு உணர்ந்தார்கள்.//

சூப்பர். அதாவது கரும்பள்ளங்கள் உருவானதின் முடிவு.

எனக்கு தெரிந்து இந்த பதிவு அருமையாக செல்கிறது.

1) ஒரு பதிவில் மற்ற பதிவின் சுட்டிகளை கொடுத்தால் தேவலை.
2) படங்கள் இருந்தால் போடலாம். இது படிப்பதற்கு மேலும் சுவை கொடுக்கும். A picture can speak 1000 words.
3) சில scientific சொற்களுக்கு (உதா, quasar) tool tip-ல் சிறிய விளக்கம் கொடுக்கலாம். இது வெறும் Find and Replace-ல் ஒரு முறை மட்டுமே செய்யக்கூடிய வேலை.

கோவி.கண்ணன் [GK] said...

செந்தில் குமரன்,

உங்கள் அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்.

மொழி பெயர்பு நன்றாக உள்ளது. புதிய செய்திகள் பொதிந்து இருக்கிறது.
சென்ற நூற்றாடினருக்கு பிரபஞ்சத்தை முழுதும் அறியும் ஆற்றல் இல்லை. கோடு மட்டும் போட்டு வைத்நிருந்தனர். இன்றைய காலத்தில் சாலை போடப்பட்டு இருக்கிறது. இன்னும் சுறிது காலத்துக்கு பிறகு எல்லாமே தெரியவரும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள் !

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கருத்துகளுக்கு நன்றி கோவி, சீனு.

சீனு நீங்கள் சொல்வது போல அடுத்த பதிவில் இருந்து செய்ய முயற்சி செய்கிறேன்.

சீனு இரு வகையான அண்டவெளிகள் உள்ளன. Spiral Galaxy, Elliptical Galaxy. spiral கேலக்ஸிக்களில் spiral arms என்ற வகையில் சுற்றி வரும்.

நீங்கள் சொல்வது போல எல்லா சமயங்களிலும் நிகழாது. Super Massive black holes இரு வகையாக செயல்படும். Active and Passive.

ஆக்டிவாக இருக்கும் போது நட்சத்திரங்களை தன்னுள்ளே ஈர்க்கும் அளவுக்கு சக்தி வாய்ந்திருக்கும் இன்னொரு வகையில் சொல்வது என்றால் அதன் Event Horizon எது வரை விரிவடையக் கூடும் என்பதை பொறுத்து அதற்குள் இருக்கும் எல்லா நட்சத்திரங்களையும் ஈர்க்கும்.

J S Gnanasekar said...

//ஆகவே பிரமாண்ட கரும்பள்ளங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் அது இருப்பதால் அதன் புவியீர்ப்பு விசையின் பாதிப்பால் அதனைச் சுற்றி இருக்கும் நட்சத்திரங்கள் எப்படி சுழல்கிறது எப்படி இருக்கிறது என்பதை வைத்தே அறிந்து கொள்ள முடியும்//

இவ்விடத்தில், 'புவியீர்ப்பு விசை' என்பது தவறான வார்த்தை. 'ஈர்ப்பு விசை' என்று இருக்க வேண்டும். பல இடங்களில் இதே தவறு இருக்கிறது.

-ஞானசேகர்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஞானசேகர் நீங்க சொல்வது சரிதான்.

புவியீர்ப்பு என்பதில் புவி இருப்பதால் அது தவறான சொல் என்று தெரிகிறது.

ஆனால் gravity என்ற சொல்லுக்கு சரியான தமிழ் சொல் சிக்க மாட்டேங்குது.

ஈர்ப்பு விசை என்பது Attractive force என்று தான் அர்த்தம் வருகிறது.

அந்த வார்த்தையை விட புவியீர்ப்பு என்பதுதான் gravity என்ற அர்தத்தை சரியாக தருவதாக உணர்கிறேன்.

gravity என்பதற்கு சரியான சொல் கிடைக்காததால் புவியீர்ப்பு என்ற சொல்லையே உபயோகித்து வருகிறேன்.

Gurusamy Thangavel said...

Senthil kumaran, I keep reading your posts regurly. It is interesting. Sorry for not typing in Tamil.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி தங்கவேல். பாதிப் பதிவு ஆங்கிலத்தில் தான் இருக்கிறது அதனால் நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது தவறில்லை :-))).

கோவி.கண்ணன் said...

வாங்க செந்தில்,

ஞான மார்க்கத்தில் சொல்லுவார்கள்.

" அஞ்ஞானம் வெளியோறும் போது மெய்ஞானம் உள்ளே இருக்குமாம் "

:)))))))

உள்ளே வந்ததற்கு மட்டற்ற மகிழ்ச்சி !

இராம்/Raam said...

Welcome back kumaran... :))

Unknown said...

கவலையே படாதீரும் அண்ணாச்சி.. அற்புதமான விஷயங்களை சுவாரஸ்யமா எழுதிட்டு வர்ரீய்ங்க.. நீங்க எழுதுங்க படிச்சி தள்ள நாங்களாச்சி.

Unknown said...

good

SURATH said...

ungal pativu nantraka irukku nanparea nandri. vettridam eappadi uruvaakirathu yentru kuravam.

SURATH said...

nanparea vettridam eappadi uruvaakirathu.

Anonymous said...

nanparea, vettridam eappadi uruvaakirathu.

navin said...

vanakam, nanba enn name navin ......
naan oru tailor.. ulaga thalaivargalin vaizkai varalarugalai
padithathin karanamaga . enakul oru thedal erpatathu ..
thedalin vilaivu oru naaval kathai elutha thodangi irukiren ..
enn naavalin maiya karu

kadavul valvathaga koorum aanma ulagai patriyathu ..........

itharkaga, enaku andaveliyai patriya thagaval thevai padugirathu ... ungalin uthavi enaku thevai

ungaluku virupam irunthal enaku mail pannuga plz
my mail id-- navinkmr756@gmail.com