ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?
அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.
ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.
ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.
பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.
இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.
அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
சூப்பர் சார்!
//அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா?//
அப்போ time machine சாத்தியம் தானே? இதை சரியாக விளக்க முடியாமல் நான் பட்ட பாட்டினை இங்கு காணலாம்.
http://jeeno.blogspot.com/2006/08/blog-post.html
//...உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான்--- உருவானது என்று ...//
முதலில் என்ற வார்த்தை இங்கு விடுபட்டு விட்டதோ?
சார்பு நிலைத் தத்துவத்தை மூன்றே பத்திகளில் விளக்கிய மாபெரும் மனிதரே வாழ்க வாழ்க! :-)
உண்மை செந்தில் குமரன். சார்பு நிலைத் தத்துவம் நீங்கள் விளக்கிய அளவில் எனக்குப் புரிந்திருக்கிறது. ஆனால் பிரபஞ்ச அளவில் அதனைப் பற்றிச் சிந்தித்தால் வெகு தூரம் செல்ல முடிவதில்லை; குழப்பம் தான் மிஞ்சுகிறது. பல முறை பலரின் விளக்கங்களைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படித்து முடித்தப் பின்னும் புரிந்தது போல் இருக்கும். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் பழைய குழப்பம் வந்துவிடும். :)
பிரபஞ்சம் விரிகிறது அல்லது சுருங்குகிறது என்று சொன்னதற்காகவா ஐன்ஸ்டீன் அவரின் புகழ் பெற்ற வாக்கியத்தைச் சொன்னார்? அணுப்பொருட்களின் உட்நிகழ்வை அறுதியாகச் சொல்ல முடியாது என்று சொன்ன க்வாண்டம் தத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தானே அவர் கடவுள் இதுவாக இருக்கலாம்; அல்லது அதுவாக இருக்கலாம் என்று சொல்லும்படியாய் தாயம் விளையாடுவதில்லை என்று சொன்னார்? அவர் கடைசி வரை க்வாண்டம் தத்துவம் சொல்லும் இந்த அறுதியிட முடியாத் தன்மையை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது காக்கின்ஸும் க்வாண்டம் தத்துவமும் நியூடனின் விதிகளும் இரண்டுமே காட்டுகின்ற ஒரே யூனிபைஃட் தியரியைத் தானே தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆன்மிகத்தைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பற்றி ஒன்றும் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் பிரபஞ்சம் விரிவடைகின்றது என்ற கண்டுபிடிப்பு எந்த வகையிலும் கடவுள் இல்லை என்பதையோ விதி இல்லை என்பதையோ 'இன்னும்' நிறுவவில்லை என்பது என் எண்ணம். :-)
மீண்டும் நன்றி குமரன். ஐன்ஸ்டின் குவாண்டம் இயற்பியல் சொன்ன நிலையில்லாமை தத்துவத்தை(uncertainity principle)ஐ கடைசி வரை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மை ஆனால் அவர் ஹீயூபிளுக்கு முன் ஒரு சக விஞ்ஞானி அவருடைய சார்பியல் தத்துவத்தை உபயோகித்து இந்த பிரபஞ்சம் விரிந்து கொண்டிருக்கிறது என்று சொன்ன சமயம் தீவிர மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்த ஐன்ஸ்டின் நிலையான பிரபஞ்சம் மேல் கொண்டிருந்த நம்பிக்கையால் தான் இதை சொன்னதாக நான் படித்திருக்கிறேன். இந்த சமயத்தில் தான் தன்னுடைய சார்பியல் தத்துவத்தில் ஒரு constant ஒன்றை வைத்து மாற்றினார் பின் இப்படி செய்தது தவறு என்றும் கூறினார். இருப்பினும் மேலும் தேடிப் பார்த்து சொல்கிறேன்.
ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கலக்கும் உங்களின் அறிவுத் திறன் என்னை வியக்க வைக்கிறது.
\\\\உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது\\\ mohammed said....naan madangalai aaivu seidavan,naan ninaikkiren neengal QUR'AAN-i padiththadillai,QUR'AAN KADAVULIN KADAISI VEDAM,QUR'AAN ariviyalukku yediraga ore oru vasanaththai udaaranam kaatta mudiyadu,insten-kku munnadiye 1430 varudaththirku munbe reletivity theory-yai QUR'AAN solliyirukkiradu.please try to read QUR'AAN.BADIL SOLLUNGAL,TODARNDU PESUVOM....

நண்பரே,
எனக்கு ஒரு சந்தேகம் space-க்கு காலம் இல்லை என நான் நினைக்கிரேன் .
என்னை பொறுத்த வரை பொருள்களின் இயக்கம் மட்டும் காலம் ஆகும். அந்த இயக்கத்தை காலம் என சொல்வதை விட கணக்கீடு என்று சரியாக சொல்லலாம். இயக்கத்தின் அளவீடை தவிர காலம் என்ற ஓன்று இல்லை .பிறகு எப்படி கால பயணம் சாத்தியம் ஆகும். மேலும் பொருள்களின் இயக்கத்தை அளவீடு செய்யலாம் . space-இணை எவ்வாறு அளவீடு செய்ய முடியும்? அளவீடு செய்ய முடியாது என் என்றால் அதட்க்கு இயக்கம் இல்லை. ஏன்? அணுவில் கூட space இருக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது .எனவே காலம் இருந்தால் அதை தெளிவாக விவரிக்கவும் .
நான் கூறியது முட்டாள் தனமாக இருந்தால் மன்னிக்கவும்.
பதில் கிடைக்குமா? நண்பரே
February 15, 2011 5:20 AM

@surath according to Einstein time is just an extra dimension of space. Space as we see is has three dimensions length width and breadth Einstein says that time is the 4th dimension of space he called it space-time continuum. He further went on to say that the speeder an object the faster time moves, it's called time dilation which is proved time and again, I have explained it in the following blog entries it might be little confusing and illogical at first but if you keep at it you will find it very interesting. Gravity according to einstein is the effect of any object with mass has on this space time continuum, his concepts are so out box that we have to leave our comfort zone to understand it.
Post a Comment