Thursday, September 21, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 6

சரி போன பகுதியில் நான் கேட்ட கேள்விக்கான விடை என்ன என்பதை லாஜிக்கலாக யோசித்து சொல்லி விடலாம். ஹைட்ரஜனில் neutron இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றால் அதில் ஒரு proton மட்டுமே இருப்பது தான் காரணம். ஹீலியம் என்பதில் பார்த்தீர்களானால் 2 protons இருக்கும் இப்படி இருக்கும் சமயம் என்னவாகும் என்றால் இரண்டுமே பாஸிடிவ் சார்ஜாக இருப்பதால் ஒன்றை ஒன்று repel செய்து அணுவே சிதைந்து போய்விடும். இந்த சமயத்தில் தான் neutron என்பது தேவையாய் இருக்கிறது. இது mesons என்னும் ஒரு பொருளை உற்பத்தி செய்து protons ஒன்றை ஒன்று repel செய்வதை தடுத்து விடும். இப்படி உற்பத்தி செய்து தடுக்கும் neutronsக்குள் இருக்கும் force தான் strong nuclear force என்று சொல்கிறோம்.

weak nuclear force என்பது தான் இந்த உலகில் முதல் ஆடம் பாம் என்பதைக் கண்டுபிடிக்க உதவியது எப்படி என்றால் uranium, plutonium போன்ற சில உலோகங்களில் இந்த strong nuclear force என்பது மிகக் குறைவாக இருக்கும்(இதற்கு சில சமயம் குறைவான neutrons இருப்பதும் காரணம் அதாவது 10 protons 8 neutrons போன்று இருப்பது ஆனால் இது மட்டுமே காரணம் இல்லை). ஒரு குறிப்பிட்ட எடையைக் கடந்த இந்த உலோகங்கள் decay ஆக ஆரம்பிக்கும். இந்த அடிப்படையில் தான் nuclear பாம்கள் தயாரிக்கப் படுகின்றன.

யோசித்துப் பாருங்கள் uranium போன்ற உலோகங்களில் இருக்கும் electrons, protons, neutrons தான் நம்முள்ளும் இருக்கிறது. ஒரு nuclear பாம் என்பது வெடித்தால் எவ்வளவு வெப்பம் வெளியாகுகிறது எவ்வளவு எனர்ஜி வெளியாகுகிறது. அவ்வளவு எனர்ஜி நம்முள்ளும் இருக்கிறது. உலகின் எல்லாப் பொருளகளிலும் இருக்கிறது.

ஆனால் இவ்வளவு அதிகமான எனர்ஜி வெளியாகமால் அனைத்தையும் bind செய்து வைக்கும் force தான் strong nuclear force.

சரி அடுத்து electro magnetic force ஒரு அணுவுக்குள் electrons இருக்கிறது அது negative -ve சார்ஜ் உள்ளது அதே சமயம் protons என்பது பாஸிடிவ் சார்ஜ் உள்ளது. இவை ஒன்றை ஒன்று attract செய்து கொண்டால் என்னவாகும் ஒன்றோடு ஒன்று இணைந்து சிதைந்து போகும் அல்லவா? அப்படி சிதைந்து போகாமல் தடுப்பது தான் electro magnetic force.

இந்த electro magnetic force என்பது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. strong nuclear force என்பது nucleus of the atom என்பதற்குள் மட்டும் இருப்பது அது neutronsக்குள் இருப்பது. அது nucleusக்குள் மட்டும் செயல்படும் அதனைத் தாண்டி அதனால் செயல் பட முடியாது. ஆனால் electro magnetic force இந்த பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலுல் பரவி இருப்பது. இதனால் தான் பிரபஞ்சத்தில் atom என்பதே இருக்கிறது. இந்த force இல்லை என்றால் பிரபஞ்சத்தில் atom என்பதே உருவாகி இருக்காது.

இது வரை சொன்னது அனைத்துமே அணுவுக்குள் இருக்கும் forces. அணு என்பது நம்முடைய கண்களுக்கு புலப்படாதது microscopic.

இது போக இருக்கும் இன்னொரு வகையான force தான் புவியீர்ப்பு விசை. இது பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கும் இல்லை பூமி போன்ற கோள்களுக்கும் இடையில் இருக்கும் force. இதனால் தான் பூமியின் நிலப் பரப்பில் நாம் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். அதே போல பூமி சூரியனைச் சுற்றுவது, நிலா பூமியை சுற்றுவது எல்லாமே இதனால் தான்.

இந்த நான்கு forces பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில்

http://en.wikipedia.org/wiki/Four_forces

இங்கு செல்லுங்கள் இதனைப் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்கள்.

சரி இந்த நான்கு force மற்றும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை singularity எனப்படும் பிரபஞ்சத் தோற்றத்தில் தான் தேட வேண்டி இருக்கிறது. singularityயின் போது இந்த நான்கு வகை forceகளும் ஒரே force ஆகத்தான் இருந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள் நான்கு force அதுதான் இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடங்களில் பரவி இருக்கிறது அந்த நான்கு force எல்லாமே ஒரே வகையான force இருந்து உருவானது ஆக மனிதன் மட்டும் அல்ல உலகில் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பது ஒரே வகையான force.

கடவுள் என்பதைப் பற்றி நாம் விவரிக்கும் பொழுது நாம் சொல்வது omnipotent and omnipresent என்று. அதாவது எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர். இதில் இருந்து தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

இவை அனைத்தையுமே இந்த force பற்றியும் சொல்லலாம். எங்கும் இருக்கிறது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. தூணிலும் இருக்கிறது துரும்பிலுல் இருக்கிறது ஆகவே நாம் இறை என்று அறிந்து வைத்திருப்பது இதைத் தானா?

அவனில்லாமல் அணுவும் அசைவதில்லை என்கிறோம். நம் அறிவியல் இன்று நமக்கு சொல்வது இந்த force என்பது இல்லாமல் எதுவுமே கிடையாது ஒரு அணு கூட உருவாகாது எல்லா அணுக்களும் சிதைந்து விடும். ஒன்றுமே உருவாகாது. இதுவும் கூட எனக்கு இந்த forceஐ உருவகிக்கவே பயன் படுவது போல உள்ளது.

இப்படி அறிவியல் பூர்வமாக இன்னும் யோசித்தால் பூமி மற்றும் அதில் இருக்கும் நாம், இருக்கும் அனைத்தையும் இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் influence செய்கின்றன. அதாவது சூரியனின் exert செய்யும் புவியீர்ப்பு விசையால் பூமி சுற்றுகிறது அதே போல பூமியின் புவியீர்ப்பு விசையால் நிலா பூமியைச் சுற்றுகிறது. அதே சமயம் நிலாவின் புவியீர்ப்பு விசை பூமியை அதில் இருக்கும் அனைவரையும் சிறிது influence செய்யும். இதே போல mars, venus போன்றவற்றின் புவியீர்ப்பு விசையும் நம்மை influence செய்யும். இது தான் ஜோதிடமா?

இப்படி எல்லாமே அறிவியல் பூர்வமாக இருந்தால் ராமர் என்பவர் எப்படி வந்தார், அல்லா என்பது யார் இல்லை இயேசு என்பவர் யார்.

இவை எல்லாம் மனிதனின் படைப்பு மற்றும் கற்பனைத் திறன்களால் இல்லை தவறாக புரிதல்களால் உருவானவர்களா?

நிர்மல் எனக்கு Let the force be with you Jedi masters என்று ஒரு பின்னூட்டம் அடித்திருந்தார். star wars படத்தில் வருவது இது. அந்தப் படத்தில் மனிதர்களில் சிலரிடம் forces கண்ட்ரோல் பண்ணும் சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் அவர்கள் பல அரிய காரியங்களைப் பண்ண முடியும் என்றும் காண்பித்திருப்பார்கள். A good science fiction is based on good science என்பார்கள். இது போலவும் சில சமயம் யோசிப்பதுண்டு நம்மால் இது போன்ற நான்கு forcesஐ control செய்ய முடிந்தால் படத்தில் வருவது போல செய்ய முடியும் என்று இந்த உலகில் அற்புதங்கள் எல்லாம் நடப்பதும் சிலர் இந்த forcesஐ அறிந்தோ அறியாமலோ கண்ட்ரோல் செய்வதால் தானா என்றும் யோசிப்பதுண்டு.

9 comments:

கோவி.கண்ணன் [GK] said...

குமரன்...!

கட்டுரை நன்றாக இருக்கிறது...!

அந்த force மட்டுமல்ல ... ஆண்/பெண் force இருப்பதால் தான் உயிரினங்கள் தொடர்ந்து இருந்துவருகிறது.

ரொம்ப சிந்தித்தால் நீங்கள் அதுவாக மறிவிடுவீர்கள் !

ஜெய் ஜெய் ஜெய் குமராநந்தா !

Anu said...

Very informative Kumaran

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கோவி. எப்படி எல்லாப் பதிவுகளுக்கும் போய் முதல்ல கமெண்ட் போட்டு பிக்கறீங்க போங்க.

நன்றி Anitha Pavankumar.

மிக்கி மௌஸ் said...

ம்....... யோசித்து பார்த்தால்........நீங்கள் சொல்வதும் உண்மை போல் தான் தெரிகிறது..... ஜோதிடம் பற்றி நான் ஒரு பதிவு போட்டிருக்கேன். படித்து தான் பாருங்களேன்.

மிக்கி மௌஸ் said...

ம்....... யோசித்து பார்த்தால்........நீங்கள் சொல்வதும் உண்மை போல் தான் தெரிகிறது..... ஜோதிடம் பற்றி நான் ஒரு பதிவு போட்டிருக்கேன். படித்து தான் பாருங்களேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

என்னங்க மிக்கி மௌஸ் நீங்க கொடுத்திருக்கிற லிங்கை ஓபன் பண்ண முடியல? உங்க பிளாக் அட்ரஸ்லயும் ஜோதிடம் பத்தி ஒண்ணும் கண்டுபிடிக்க முடியல.

குமரன் (Kumaran) said...

ஸ்டார்ங்க் ந்யூக்ளியர் சக்தி புரிந்தது. வீக் ந்யூக்ளியர் சக்தியைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். எலக்ட்ரோ மாக்னடிக் சக்தியும் அவ்வளவாகப் புரியவில்லை. விக்கிபீடியாவைப் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

மற்ற படி கட்டுரையில் நீங்கள் கேட்டுள்ள கேள்விகள் எல்லாம் அவரவர் தங்களுக்குள்ளேயே கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு அவரவர் புரிதலின் படி ஓராயிரம் பதில்கள் வரும். :-)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வீக் நியூக்கிளியர் சக்தி என்பது ஸ்டாரங் நியூக்கிளியர் சக்தியே தான். சில உலோகங்களில் இந்த ஸ்டாரங் நியூக்கிளியர் சக்தி என்பது குறைவாக இருக்கும். அப்பொழுது அந்த உலோகங்கள் வெப்பமடையும் பொழுதோ இல்லை வேறு சில சந்தர்ப்பங்களில் ஸ்டாரங் நியூக்கிளியர் சக்தி தன்னுடைய சக்தி குறைந்து புரோட்டான்ஸ் அந்த அணுவை சிதைத்து விடும். அப்படி சிதைவடையும் சமயம் வெளிப்படும் சக்தி தான் நியூக்கிலியர் குண்டு போன்றவற்றை தயாரிக்க பயன்படுகிறது. புளூட்டோனியத்தை எடுத்துக் கொண்டீர்களானால் அது ஒரு குறிப்பிட்ட எடை அடைந்த உடன் அதனை வெப்பமுறச் செய்தால் அது நியூக்கிளியர் பாமாக மாறி விடுகிறது.

எலக்ட்ரோ மாக்னடிக் என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது. அணுக்கள் இல்லாத இடம் என்று ஒன்று கிடையாது. ஆகையால் அந்த அணுக்களில் இருக்கும் எலக்ட்ரான்ஸ் மற்றும் புரோட்டான்ஸை ஒன்றோடு ஒன்று இணைந்து சிதைந்து போகாமல் தடுப்பதுதான் எலக்டிரோ மாக்னடிக் போர்ஸ். ஸ்டிராங் நியூக்கிளியர் போர்ஸ் என்பது அணுவின் nucleusக்குள் மட்டுமே செயல்படும் ஆனால் எலக்ட்ரோ மாக்னடிக் என்பது அணு முழுவதும் இருக்க வேண்டும். அணு இல்லாத இடமே கிடையாது என்பதால் எல்லா இடங்களிலும் எலக்டிரோ மாக்னடிக் போர்ஸ் இருக்க வேண்டும் அல்லவா?

குமரன் (Kumaran) said...

செந்தில் குமரன். வீக் ந்யூக்ளியர் சக்தி புரிந்தது. நன்றிகள். எலக்ட்ரோ மாக்னடிக் சக்தி இன்னும் புரியவில்லை. மற்ற இடங்களில் படித்துப் பார்க்கிறேன் புரிகிறதா என்று. நன்றி.