Wednesday, September 13, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 1

Bubble vs Bang எதோ ஹாலிவுட் திரைப்படத் தலைப்பு போன்று இருந்தாலும், இன்று காஸ்மாலஜி(Cosmology) என்னும் துறையில் இன்று பல மில்லியன் வருடக் கேள்வி இதுதான்.

காஸ்மாலஜி என்பது நம்முடைய பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் துறையாகும். ஐன்ஸ்டீன், நீயூட்டன், ஹாகிங்ஸ் போன்ற அறிவியல் துறையில் மிக புகழ் பெற்று இருக்கும் அனைவருமே இந்த துறையில் ஆராய்ச்சி செய்தே புகழ் பெற்றார்கள்.

இது ஆன்மீகத்துடனும் மிகவும் நெருக்கமான ஒரு துறையாக நாம் கருதலாம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு நாம் இது நாள் வரையிலும் ஏன் இன்று கூட ஆன்மீகத்தையே நாடியுள்ளோம்.

இது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை அறியும் தெரியும் சமயம் நாம் நம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளை நம்முடைய நம்பிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது.

Cosmology என்னும் இத் துறையில் இன்று நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை Hubble என்பவரால் 1929ம் கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றின் அடிப்படையிலேயே நடை பெறுகிறது.

இவரின் கண்டுபிடிப்பே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கே விளக்கியது;-).

இவரின் கண்டுபிடிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன் அது வரை இந்த துறையில் நடந்தது என்னென்ன என்று காணலாம். இந்த துறையின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு எது என்று நாம் அறிய முற்பட்டால் அது காப்பர்னிக்கஸ் இந்த உலகை உருண்டை என்று கண்டு பிடித்தைத் தான் சொல்ல வேண்டும். அது வரை இருந்து வந்த நம்பிக்கையான தட்டை உலகம் என்ற நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் இருந்த கண்டுபிடிப்பாகும் அது.

பின் நீயூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததை சொல்லலாம். புவியீர்ப்பு சக்தி தான் என்பது நாம் இந்த பூமியின் பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்திதான் இந்த சந்திரன் பூமியை சுற்றி வரச் செய்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வரச் செய்கிறது. இது அனைத்தும் தான் ஐன்ஸ்டினின் சார்பு நிலை கண்டுபிடிப்பு வரும் வரை இந்தத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டினுக்கு ஹூபில் எப்படி சார்பு நிலை தத்துவத்தை விளக்கினார். அந்தக் கண்டுபிடிப்பு எப்படி மத நம்பிக்கைகளை மாற்றும் விதமாக உள்ளது.

6 comments:

தருமி said...

இப்போதுதான் ஆரம்பிக்கிறேன்.

கலிலியோதானே உலகம் உருண்டை என்று முதலில் சொன்னதாகச் சொல்லுவார்கள். நீங்கள் காப்பர்னிக்கஸ் என்கிறீர்களே?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாங்க தருமி ஐயா வந்ததற்கு மிகவும் நன்றி. காப்பர்னிக்கஸ்தான் முதன் முதலில் இதனை கண்டுபிடித்து வெளியிட்டார். ஆனால் வாடிகனுக்கு பயந்து இதனை வெளியிடவில்லை. கலீலியோ இவரின் மாடலை பிரபலப்படுத்தினார் அவ்வளவே.

தருமி said...

காப்பியடிச்சி மாட்டிக்கிட்டதுக்கே இவ்வளவு வாங்கிக் கட்டிக்கிட்டாரா? பாவம்தான்!

குமரன் (Kumaran) said...

செந்தில் குமரன்,

இதோ உங்கள் தொடரைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். :-)

ஐன்ஸ்டீனுக்கு முன்பு வரை ஐன்ஸ்டீனின் இடத்தைப் பெற்றிருந்தவர் நியூட்டன் என்று சொல்வார்கள். நியூட்டனின் விதிகளே இயற்பியல் முடிவான விதிகள் என்ற எண்ணம் 'ந்ம்பிக்கை' என்று சொல்லும் அளவிற்கு அறிவியல் உலகத்தில் நிலைபெற்றதாகச் சொல்வார்கள். ஆனால் நியூட்டனின் விதிகள் பருப்பொருட்களின் (மேஸிவ் ஆப்ஜெக்ட்ஸ்) ஈர்ப்புவிசையை விளக்கிய அளவு அணுப்பொருட்களின் உட்நிகழ்வுகளை விளக்க முடியவில்லை. அங்கே தான் ஐன்ஸ்டீனின் கருத்துகள் உதவிக்கு வந்தன். ஐன்ஸ்டீனின் சார்பு நிலைத் தத்துவம் நியூட்டனின் சில விதிகளுக்கு எதிராக இருந்தன என்றும் அதனால் அவரின் கருத்துகள் அவ்வளவாகத் தொடக்கத்தில் அறிவியலார் மத்தியில் செல்லுபடி ஆகவில்லை என்றும் பின்னர் ஹூப்பிள் சூரிய கிரகணத்தின் போது ஒளி அலை ஒரு பருப்பொருளைத் தாண்டும் போது வளைவதைக் காட்டிய பின்னரே சார்பு நிலைத் தத்துவம் செல்லுபடியானது என்றும் படித்திருக்கிறேன்.

உலகம் தட்டை என்றிருந்த நம்பிக்கை கிரேக்க நம்பிக்கையின் அடிப்படையிலான மேற்குலக நம்பிக்கை. கிழக்குலகில் உலகம் முட்டை வடிவில் இருக்கிறது; உலகம் மட்டுமில்லை பிரபஞ்சமே உருண்டை வடிவில் தான் இருக்கிறது என்ற எண்ணம் (நம்பிக்கை என்றும் சொல்லலாம்) இருந்திருக்கிறது. உலகத்தை பூகோளம் (பூமியாகிய உருண்டை) என்றும் பிரபஞ்சத்தை அண்டம் (முட்டை), பிரம்மாண்டம் (பெரிய முட்டை) என்றும் கிழக்குலக நூல்கள் குறிப்பிடுகின்றன. அது சும்மா ப்ளுக்கா இல்லை ஆய்ந்தறிந்த நம்பிக்கையா என்பது விவாதத்திற்குரியது தான்.

நான் அறிந்தவரை காப்பர்நிக்கஸ் ஜியோசென்ட்ரிக் தத்துவத்தை முறியடித்து ஹீலியோ சென்ட்ரிக் தத்துவத்தை நிலைநாட்டியர். அவர் காலம் வரை பூமியை எல்லா வானவியல் பருப்பொருட்களும் சுற்றுவதாக கிரேக்க தத்துவ ஞானிகள் நினைத்தனர். நம் நாட்டு வானவியலும் சோதிடமும் கூட அந்த எண்ணத்தின் அடிப்படையில் அமைந்தவையே. காப்பர்நிக்கஸ் தான் பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்பதை நிறுவினார்.

பூமி உருண்டை என்று நிறுவியர் கலிலியோ என்று தான் நினைக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குமரன் தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. உங்களின் பின்னூட்டட்த்தில் இருந்தே தங்களின் அறிவியல் அறிவும் தங்கள் ஆன்மீக அறிவைப் போலவே கூர்மையானது என்று அறிந்து கொள்ள முடிகிறது.

உலகம் உருண்டை என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு இருந்தே சொல்லப் பட்டு வரும் ஒரு கருத்துதான் ஆனால் காப்பர்னீக்கஸின் ஹீலியோசென்ட்ரிக் மாடல் மூலமாகத்தான் அதற்கு ஒரு வடிவம் கிடைத்தது. ஆகவே தான் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்.

http://en.wikipedia.org/wiki/Flat_Earth

இந்த சுட்டியில் இதனைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

ஐன்ஸ்டின் நீயூட்டன் புவியீர்ப்பு என்பது ஒரு வகையான ஈர்ப்பு விசை(attractive force) என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஆனால் அதனை மாற்றி அது விசை(force) அல்ல அது மாஸ்(mass) என்பது காலம்(time) மற்றும் இடம்(space) மீது ஒரு வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது அதுதான் புவியீர்ப்பு என்று விளக்கினார். இதை ஸ்பேஸ் டைம் கண்டினுயேயம்(space time continuum) என்று விளக்கினார்.

அவர் கடைசி வரை குவாண்டம் மெக்கானிக்ஸின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அரவிந்தன் நீலகண்டன் has left a new comment on your post "அறிவியலும் ஆன்மீகமும் - 1":

//அவர் கடைசி வரை குவாண்டம் மெக்கானிக்ஸின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்ளவே இல்லை.//
தவறு. அந்த அளவுக்கு குருட்டாந்தனம் கொண்டவர் அல்ல ஐன்ஸ்டைன். க்வாண்டம் இயற்பியல் (குறிப்பாக அதற்கான கோபன்ஹேகன் வியாக்கியானம்) ஒரு முழுமை அடைந்த தீர்வாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.