காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.
ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒலியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒலியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒலி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.
ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒலி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒலியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.
அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.
ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.
நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.
All physics equations and laws we have will be broken down during singularity.
Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.
இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.
optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.
இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.
என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.
மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.
Wednesday, September 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
aarthi i do agree with all your points, what i meant to say was that for first life to form on earth needed favorable conditions. the reason life has formed on any of the other planets in our solar system is also very simple the conditions were not favorable on the other solar systems.
we should also remember that the conditions we have on earth today were because of presence of life forms in earth which is why the eco system of the earth should be maintained. if trees are destroyed in a heaps the conditions in earth changes drastically. similarly without some of the microscopic organisms the conditions in earth would never be the same.
so consider earth before the first life has been formed. the conditions would have been very much similar to that of in mars or venus. so my point is for the life to form on earth the favorable conditions we had were 1 billion to one. what i mean to say is if it would have been 1 degree hotter or 1 degree cooler the first DNA would never have formed. similarly for the first life to form on earth it needed many such conditions which were all in place and so we exist today as we are.
that is the thing which i have suggested there.
if you have time go through this link here the author is more favoring science like you and talks about how even when there are so much odds against it could be very simple and tries to help ur case.
but he also explains the odds against which life form was formed.
http://www.talkorigins.org/faqs/abioprob/abioprob.html
Red, Blue shift பற்றி எனக்குத் தெரிந்த தகவல்.
ஒரு காலக்ஸியில் இருந்து வெளிப்படும் வெளிச்சமானது (light) அதிக wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் சிகப்பை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மிடம் இருந்து விலகி செல்கிறது என்று அர்த்தம். அதுவே குறைந்த wavelength-ஐ கொண்டதாகவும், அதன் நிறம் நீலத்தை நோக்கி செல்வதாகவும் இருந்தால், அந்த காலக்ஸி நம்மை நோக்கி வருகிறது என்று அர்த்தம். இவைகளை முறையே Red shift மற்றும் Blue shift என்று கூறுவர். Doppler Effect-ஐ வைத்து Red Shift மற்றும் Blue Shift-ஐ விவரிக்கின்றனர். ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நிலையாக இருந்தால், அது பொதுவாக பச்சை நிர ஒளி அலைகளை வெளிப்படுத்தும். ஒரு பொருள் உங்களை நோக்கி வந்தால், அதன் wavelength குறைவாக இருக்கும். அதனால் அதன் frequency அதிகமாக இருக்கும். அதன் நிறம் நீல நிறமாக இருக்கும் (400 nm). இது Blue shift. அதுவே, ஒரு பொருள் உங்களை விட்டு விலகி சென்றல், அதன் wavelength நீளமாக (lengthy) இருக்கும். அதனால் அதன் frequency குறைவாக இருக்கும். அதன் நிறம் சிகப்பு நிறமாக இருக்கும் (700 nm). இது Red Shift.
சரி தானே? இதைத் தான் எனது The Expanding Universe-ல் கொடுத்திருக்கிறேன்.
நல்லா விளக்கி இருக்கீங்க Red shift பற்றி நன்றி.
Stephen Hawkins-ன் black hole இனிதான் வருமோ.
(அவரைப் பற்றித் தெரியும் என்பதையும், அவரது brief history of time என்ற நூலையும் ஒருமுறை வாசித்தேன் என்பதைக் காட்டிக் கொள்ளத்தான் இந்த கேள்வி!!)
ஒரு Feedback. இந்த நாலு பகுதிகளைப் படித்ததில் தோன்றியது. நீங்கள் மிகக் கடினமானதையும் மிக எளிமையாகச் சொல்கிறீர்கள். அந்தத் திறமை நன்கு உள்ளது உங்களிடம். ஆனால் கப்பு கப்புன்னு ஒன்னுல இருந்து இன்னொன்னுக்குத் தாவுரீங்க. உங்க மனசுல அந்த ரெண்டுக்கும் நடுவுல தொடர்பு இருக்கிறது தெரியலாம். ஆனா படிக்கிறவங்க எல்லாருக்கும் அந்த தொடர்பு தானா புரியணுமே? எளிமையா சொல்ற அதே நேரத்துல படிக்கிறவங்க பார்வையில நின்னு இன்னும் விளக்கமா எப்படி சொல்லலாம்ன்னு பாருங்க.
இப்போதைக்கு இந்தப் பதிவுக்கு வந்து படிக்கிறவங்க குறைச்சலா இருந்தாலும் இந்த மாதிரி முயற்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். அப்போது தான் அறிவியல் நம் மக்களைச் சென்று அடையும். அந்த விதத்தில் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டப் பட வேன்டியது.
ப்ளு ஷிப்ட், ரெட் ஷிப்ட் பற்றி சொன்னீர்கள். அப்படியே சிவப்பு நிற ஒளி அதிக தூரம் போகும்ன்னு சொன்னீர்கள். ஏன் சிவப்பு நிற ஒளி அதிக தூரம் போகும்ன்னு சொல்லாம விட்டுட்டீங்களே? நீங்க சொல்லியிருக்கீங்க ஆனா எனக்குப் புரியலையா?
மிக நன்றாக –கூப்லின் பரிசோதனையை விவரித்திருக்கிறீர்கள். ஏதன் அடிப்படையில் பிரப்பஞ்சம் விரிவடைகிறது என்று சொன்னார் என்பதையும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் ஏன் அது வெடிப்பாக இருக்க வேண்டும். சிறு புள்ளியிலிருந்து ஏன் மெதுவாக விரிவடையத் தொடங்கி இருக்கக் கூடாது என்பதை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? அப்புறம் அண்மையில் இப்படி பிரபஞ்சம் விரிவடையும் வேகம் குறையத் தொடங்கியிருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்; படித்திருக்கிறீர்களா?
இந்து மதத்தில் சொல்லப்படும் படைப்பைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். இந்து மதத்தில் எதுவுமே அழிக்க முடியாதது. என்றுமே இருந்தது. இந்தப் பிரபஞ்சம், உயிர்கள், உயிரற்றவைகள் எல்லாமே இறைவனின் பகுதியாக என்றுமே நிலையானவை. பிரம்ம தேவன் படைக்கிறான் என்று புராணங்கள் சொல்லும் போது உருவமின்றி மறைந்திருந்த ஒரு நிலையிலிருந்து உருவம் உள்ள நிலைக்கு மீண்டும் கொண்டு வருகிறார் என்று தான் பொருள். படைப்பது என்பது இங்கே நீங்கள் எண்ணிக் கொள்வதை போல் இல்லாத ஒன்றிலிருந்து எதனையும் தோற்றுவிப்பது இல்லை. ஏற்கனவே இருக்கும் உயிர்களையும் பிரபஞ்சத்தையும் வெளிப்படுத்துவது. ப்ரளயம் என்று ஒன்றையும் இந்து மதம் சொல்கிறது. அப்போது உயிர்கள், பிரபஞ்சம் எல்லாமே சூக்கும உருவில் இறைவனில் அடங்கிவிடுவதாகச் சொல்கிறது. லயம் என்றால் கலத்தல். ப்ரலயம் (ப்ரளயம் - வடமொழியில் ல ள வேறுபாடு இல்லை) என்றால் நன்றாகக் கலத்தல். அப்படி உருவின்றி இருப்பவைகளை மீண்டும் வெளிக்கொணர்வதையே படைத்தல் என்று இந்து மதம் சொல்கிறது.
இங்கே அறிவியல் சொல்வதைத் தான் இந்து மதமும் சொல்கிறது என்று நிறுவ நான் வரவில்லை. ஆனால் அறிவியலாளர்கள் சமயம் என்ன சொல்கிறது என்று புரிந்து கொள்ளாமலேயே சமயம் சொல்வது தவறு என்பதும் சமய அறிஞர்கள் அறிவியலாளர்களுக்கு உண்மையே தெரியாது என்பதும் இரண்டுமே தவறு. சிலர் அறிவியல் சொல்வது தான் சமயத்திலும் இருக்கிறது என்று எடுத்துக்காட்டுகளைத் தர முற்படுவர். வேதங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கின்றன; தமிழன் ஏற்கனவே சொல்லியிருக்கிறான் என்றெல்லாம் இங்கே தமிழ்மணத்தில் எழுதும் என் நெருங்கிய நண்பர்களே எழுதுவதுண்டு. இதெல்லாம் சந்தர்ப்ப வாதத்தில் அமையும். வேதங்களும் சாத்திரங்களும் சொன்னவை அந்த காலத்தில் அவை சொல்லப்பட்ட போது இன்று அறிவியலாளர்களால் கண்டு சொல்லப்படுபவைகளை வைத்துக் கொண்டு சொன்னவையா இல்லை எல்லாம் தற்செயலாகப் பொருந்திப் போகின்றவையா என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதனால் இந்து மதமும் சிங்குலாரிட்டியைத் தான் பிரம்மதேவனின் படைப்புக் காலமாகச் சொல்லியிருக்கிறது மட்டையடி அடிப்பதற்கு வாய்ப்பிருந்தாலும் அப்படி செய்யாமல் விடுக்கிறேன். :-)
பூமி உருவானது தற்செயலாக இருக்கலாம்; உயிர்கள் உருவானது தற்செயலாக இருக்கலாம்; மனிதன் பரிணாம வளர்ச்சியில் இந்த உருவை அடைந்ததும் தற்செயலாக இருக்கலாம். என்னால் இவற்றை உண்மைகளாக இருக்கலாம் என்று ஏற்றுக் கொள்ள முடிகின்ற அதே நேரத்தில் சமயங்கள் சொல்வதையும் முழுமையாகத் தள்ளவும் முடியவில்லை. இதனை பற்றுதல் என்று நீங்கள் சொல்லலாம்; ஈகோ என்று சொல்லலாம். நான் அறிவியலில் இன்னும் கண்டு சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது என்று சொல்வேன். பரிணாமம் முதற்கொண்டு பல தத்துவங்களை உண்மைகளாக ஐயமற நிறுவ இன்னும் பலகாலங்கள் செல்லும். இதுவரை பரிணாமம், பெருவெடிப்பு போன்ற கொள்கைகளுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்காததால் அவற்றை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாம் என்றே பெரும்பாலான அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களும் இவை ஐயமற நிறுவபட்டுவிட்டது என்று எண்ணுவதில்லை. என்னைக் கேட்டால் அவை பொய் என்று எடுத்துக் கொண்டு அதற்கான ஆதாரங்களை இன்னும் அறிவியலாளர்கள் தேடவில்லை; எல்லோரும் அவை உண்மை என்று நிறுவ வேண்டிய ஆதாரங்களையே தேடிக் கண்டுபிடிக்கின்றனர். (இது நான் சொல்லவில்லை. ஒரு அறிவியலாளரின் கட்டுரையில் சொல்லியிருந்தார். படித்த போது சரியென்று தோன்றியது).
எல்லா சமயங்களிலும் குறைபாடுகள் உண்டு; அவை இடும் சண்டைகள் பொருளற்றவை என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
வருகைக்கு நன்றி தருமி ஐயா, மற்றும் குமரன். உங்களின் feedbackகுக்கு நன்றி அடுத்த முறை இருந்து இதனை நடை முறை படுத்த முயற்சிக்கிறேன்.
சீனு அவர்களின் பின்னூட்டத்தில் சொல்லி இருப்பது போல சிகப்பு நிறத்திற்கு wavelength(அலைவரிசை) அதிகம். ஒளி, ஒலி எல்லாமே அலைகளாக பயணம் செய்கிறது. இப்படி செல்லும் சமயம் ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள இடைவெளிதான் அலைவரிசை(மிக எளிமைபடுத்தி சொல்லி இருக்கிறேன்).
நான் இங்கு நான் மதம் குறித்து சொல்ல வரும் கருத்துக்களையும் எளிமைப்படுத்தி(அதாவது blunt ஆக சொல்லி வருகிறேன்).
நீங்கள் சொல்லி இருப்பது போல விரிவாக சொல்வதில்லை. என்னுடைய சமயம் சார்ந்த நம்பிக்கைகளை விரிவாக பின்னூட்டத்தில் சொன்னால் அது சரியாக இருக்காது அதனை தனிப் பதிவாக இடுகிறேன்.
ஆனால் நான் சொல்லி வருவது மிக எளிமைபடுத்தப் பட்ட கருத்துக்களை மட்டுமே அதாவது மதம் குறித்து சண்டைகள் கூடாது போன்றவை. என் சமயம் குறித்த கருத்துகளை தனிப் பதிவாக எழுதுகிறேன்.
Post a Comment